தேவையான பொருட்கள் :

                      * தக்காளிஅரை கிலோ

                      * மிளகாய் தூள்2 டேபிள் ஸ்புன்

                     * மஞ்சள் தூள்கால் டீஸ்புன்

                     * புளி பெரிய நெல்லிக்காய் அளவு

                     * உப்புதேவைக்கேற்ப

                     * கடுகுஅரை டீஸ்புன்

                     * வெந்தயம்அரை டீஸ்புன்

                     * நல்லெண்ணெய்தேவைக்கேற்ப

தாளிக்க :

                    * கடுகு - அரை டீஸ்பு+ன்

                    * பெருங்காயம் - கால் டீஸ்புன்

                    * எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை :

                       தக்காளியை முதல் நாள் இரவு நன்றாக அலசி, இரண்டாக நறுக்கி ஒரு ப்ளாஸ்டிக் கன்டைனரில் போட்டு சிறிதளவு உப்பு சேர்த்து, கைபடாமல் குலுக்கி வைக்கவும். இரவெல்லாம் ஊறி தக்காளியில் நீர் விட்டிருக்கும்.

                       இந்த உப்பு நீரிலேயே ஊறுகாய்க்கு பயன்படுத்தப் போகும் புளியை போட்டு வைத்து ஊற விடலாம்.

                       மறுநாள், தக்காளி துண்டுகளை கைகளை உபயோகிக்காமல், ஒரு கரண்டியால் எடுத்து ஒரு தட்டில் வைத்து வெயிலில் காய வைக்கவும். அந்த உப்பு நீரையும் வெயிலில் வைக்கவும்.

                        மாலையில் தக்காளி துண்டுகளை அதே உப்பு நீரில் சேர்த்து மூடி வைத்து விடவும். மீண்டும் அடுத்த நாள் காலையில் தக்காளி துண்டுகள் தனியே, உப்பு நீர் தனியே பிரித்து வெயிலில் வைத்து காய வைக்கவும். இரண்டு மூன்று நாட்கள் வெயிலில் வைத்தால் போதும். தக்காளி துண்டுகள் நன்றாக சுருங்கிவிடும். உப்பு நீரும் வற்றி இருக்கும்.

                       மிக்சியில் தக்காளி துண்டுகள், புளி மற்றும் வற்றியுள்ள உப்பு நீர் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.

                        வெறும் கடாயில் கடுகு, வெந்தயம் சேர்த்து வறுத்து, பொடித்துக் கொள்ளவும்.

                        அதே கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு பொரிந்ததும், பெருங்காயம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

                       இதில் அரைத்த தக்காளி-புளி விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். வெயிலில் காய வைத்திருப்பதால் தக்காளி விரைவிலேயே வதங்கி விடும்.

                       இதனுடன் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். சிறிதளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். உப்பு சரிப்பார்த்து தேவையெனில் சிறிது சேர்க்கவும்.

                       இப்போது பொடித்து வைத்துள்ள கடுகு-வெந்தயம் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை ஆற வைக்கவும். பிறகு, அடுப்பை நிறுத்தி விடவும். ஈரமற்ற பாட்டிலில் போட்டு காற்று புகாதபடி சேமித்து வைக்கவும்.

                       இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சாதத்துடன் பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும். சாம்பார் சாதம், தயிர் சாதத்துடன் தொட்டுக் கொள்ள அருமையாக இருக்கும். இட்லி, தோசைக்கும் தொட்டு சாப்பிடலாம். மேலும் சப்பாத்தி, பரோட்டா, நாண் இவற்றிற்கும் பொருந்தும்.

தக்காளி ஊறுகாய் செய்முறை

கருத்துகள் இல்லை