தேவையான பொருட்கள் :
* சுரைக்காய்கால் கிலோ
* வெங்காயம்1
* தக்காளி அரை கப்
* பச்சை மிளகாய்1
* கறிவேப்பிலை1 கொத்து
* மிளகாய்த்தூள் 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள்தூள்1 டீஸ்பூன்
* புளி நெல்லிக்காய் அளவு
* உப்புதேவைக்கேற்ப
* எண்ணெய்தேவைக்கேற்ப
* பெருங்காயத்தூள்கால் டீஸ்பூன்
* கொத்தமல்லி 1 கைப்பிடி
செய்முறை :
குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் பூண்டு, வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும். பிறகு அத்துடன் சுரைக்காய், தக்காளி சேர்த்து வதக்கவும்.
பின் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, புளி கலந்து சிறிது தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி போட்டு 2 விசில் விடவும். பின் விசில் அடங்கியதும் சுரைக்காயை ஆற விட்டு பருப்பு மத்து வைத்து நன்கு கடைந்து விட்டு கொத்தமல்லி தூவி வைக்கவும்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : உப்புமா, வெண்பொங்கல், இட்லி மற்றும் தோசைக்கு வைத்து சாப்பிட நான்றாக இருக்கும்.
கருத்துகள் இல்லை