தேவையான பொருட்கள் :
* கோவக்காய் கால் கிலோ (நறுக்கியது)
* வெங்காயம்7
* தக்காளி3
* பச்சை மிளகாய்3
* இஞ்சி (நறுக்கியது)கால் டீஸ்பூன்
* பூண்டு பல்4
* மிளகாய் தூள்கால் டேபிள் ஸ்பூன்
* தனியா தூள்கால் டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்
* எண்ணெய்தேவைக்கேற்ப
* கடுகு அரை டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு அரை டீஸ்பூன்
* உப்பு தேவைக்கேற்ப
செய்முறை :
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்துத் தாளிக்கவும்.
பின் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
தக்காளி, இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாயையும் சேர்த்து வதக்கவும்.
பின் கோவக்காயையும் சேர்த்துக் கிளறி, நீர் தௌpத்து வேகவிடவும்.
கோவக்காய் வெந்து, மசாலாவுடன் சேர்த்து, ட்ரை ஆனதும் இறக்கவும்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதனை தோசை மற்றும் சப்பாத்திக்கு வைத்து சாப்பிடலாம்.
கருத்துகள் இல்லை