தேவையான பொருட்கள் :
* கத்தரிக்காய் 3
* உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு 1 டீஸ்பூன்
* காய்ந்த மிளகாய் 5
* பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை
* புளி எலுமிச்சை அளவு
* உப்பு தேவைக்கேற்ப
* கடலை எண்ணெய் தேவைக்கேற்ப
* விளக்கெண்ணெய் தேவைக்கேற்ப
செய்முறை :
கத்தரிக்காயை விளக்கெண்ணெய் தடவி சுட்டெடுக்கவும். ஆறியதும் தோலுரித்து, மசித்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும். வறுத்தவற்றை பொடி செய்து கொள்ளவும்.
பிறகு புளி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மசித்த கத்தரிக்காயையும் போட்டு நன்கு கடைந்து கொள்ளவும்.
இப்போது கத்திரிக்காய் சட்னி ரெடி!. குழந்தைகள் மிக விரும்பி சாப்பிடுவார்கள்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சாதம்,இட்லி, தோசை.
கருத்துகள் இல்லை