தேவையான பொருட்கள் :
* பச்சரிசி ஒரு கப்
* தக்காளி2
* துவரம் பருப்புகால் கப்
* பெரிய வெங்காயம்1 (பொடியாக நறுக்கியது)
* காய்ந்த மிளகாய்3
* கறிவேப்பிலை ஒரு கொத்து
* பெருங்காயத் தூள்கால் டீஸ்பு+ன்
* உப்புதேவைக்கேற்ப
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் பச்சரிசி, காய்ந்த மிளகாய், துவரம் பருப்பு, தக்காளி ஆகியவற்றை ஒரு மணிநேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த பொருட்களினை மிக்சியில் நன்றாக தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தினை எண்ணெயில் வதக்க வேண்டும். அரைத்த மாவுடன் வதக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு நன்றாக கரைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்துக் காய்ந்ததும் எண்ணெய் தடவிய பிறகு மாவினைப் பரவலாக ஊற்ற வேண்டும்.
தோசைக்கல்லில் மாவை ஊற்றி தேய்க்க கூடாது. மேலே எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : அனைத்து சட்னி வகைகளும் நன்றாக இருக்கும். குறிப்பாக தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கொத்தமல்லி சட்னி, சாம்பார்.
கருத்துகள் இல்லை