தேவையான பொருட்கள் :
* கொத்தவரங்காய்கால் கிலோ
* கடுகுஅரை டீஸ்பூன்
* உளுத்தம் பருப்புஅரை டீஸ்பூன்
* மஞ்சள்தூள்அரை டீஸ்பூன்
* மிளகுத்தூள்அரை டீஸ்பூன்
* காய்ந்த மிளகாய்5
* தேங்காய் துருவல் அரை கப்
* கறிவேப்பிலைஒரு கொத்து
* உப்புதேவைக்கேற்ப
* எண்ணெய்தேவைக்கேற்ப
செய்முறை :
கொத்தவரங்காயில் உப்பு, மஞ்சள்தூள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும். காய் நன்கு வெந்த உடன் தண்ணீரை வடித்து காயை எடுத்துக் கொள்ளவும்.
பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில், உளுத்தம் பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாய், ஆகியவற்றை வறுத்துக் கொள்ளவும்.
வறுத்த பொருள்களுடன் தேங்காய் துருவல் சேர்த்து, தண்ணீரை தௌpத்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
பின்பு ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெயை காயவைத்து அதில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, அவற்றுடன் வேக வைத்த கொத்தவரங்காய், அரைத்த விழுதை மற்றும் தேவையான அளவு நீர் சேர்த்து கொஞ்ச நேரம் கொதிக்க வைத்து இறக்கவும்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இந்த சுவையான கூட்டை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
கருத்துகள் இல்லை