தேவையான பொருட்கள் :
* கத்தரிக்காய் (நீளமாக நறுக்கியது)4
* துவரம்பருப்பு1 கப்
* புளிஎலுமிச்சை அளவு
* மஞ்சள்தூள்ஒரு டீஸ்பூன்
* பெருங்காயத்தூள்1 சிட்டிகை
* கறிவேப்பிலை ஒரு கொத்து
* கடுகுஅரை டீஸ்பூன்
* உப்பு தேவைக்கேற்ப
* எண்ணெய் தேவைக்கேற்ப
* தண்ணீர் தேவைக்கேற்ப
வறுத்து அரைக்க:
* பச்சை மிளகாய் - 4
* கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - தேவைக்கேற்ப
* வெந்தயம், கடுகு - ஒரு டீஸ்பூன்
* தேங்காய் துருவல் - அரை கப்
செய்முறை :
துவரம்பருப்பை வேகவைத்து எடுத்து கொள்ளவும். வறுக்கக் கொடுத்துள்ளவற்றை அரை டீஸ்பூன் எண்ணெயில் வறுத்து அரைக்கவும்.
புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து அதில் உப்பு, மஞ்சள்தூள் போட்டு கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும் கத்தரிக்காயை அதில் போட்டு பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
கத்தரிக்காய் வெந்ததும் அதில் அரைத்த மசாலாவை சேர்க்கவும். நன்றாகக் கொதித்ததும் வேகவைத்த துவரம்பருப்பைக் கடைந்து அதில் சேர்த்து, கொதிக்க வைத்து இறக்கவும். பின்பு கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
இப்போது மணமணக்கும் சாம்பார் ரெடி! மதிய உணவிற்கு மிக ஏற்றது.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சாதம், இட்லி, தோசை.
கருத்துகள் இல்லை