தேவையான பொருட்கள் :
* கேரட்கால் கிலோ
* பால்1 கப்
* பாதாம் பருப்பு5
* முந்திரி5
* சர்க்கரை அல்லது தேன்அரை கப்
செய்முறை :
முதலில் முந்திரி, பாதாம் இரண்டையும் பாதியாக பொடித்து கொள்ளவும்.
பின் கேரட்டினை நன்றாகக் கழுவிக் கொள்ளவும். கேரட்டினை சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
பிறகு கேரட்டை பாலுடன் சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டி கொள்ளவும்.
கடைசியில் சர்க்கரை அல்லது தேன், பொடித்ததையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
இப்பொழுது சிறிது ஐஸ் கட்டிகள் சேர்த்து கேரட் ஜூஸினை பருகலாம்.
கருத்துகள் இல்லை