தேவையான பொருட்கள் :
* தக்காளிகால் கிலோ (சிறிதாக நறுக்கியது)
* இஞ்சி விழுது2 டீஸ்பூன்
* காய்ந்த மிளகாய் 2 அல்லது 3
* உளுந்தம்பருப்பு 1 டேபிள் ஸ்பூன்
* மிளகு 5
* கிராம்பு2
* தண்ணீர்சட்னி அரைப்பதற்கு தேவையான அளவு
தாளிக்க:
* எண்ணெய் - தேவைக்கேற்ப
* காய்ந்த மிளகாய் - 1
* கறிவேப்பிலை - ஒரு கொத்து
* கடுகு - அரை டீஸ்பூன்
* பெருங்காயம் - ஒரு சிட்டிகை (தேவைப்பட்டால்)
செய்முறை :
முதலில் கடாயில் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடான பிறகு அதில் உளுந்தம்பருப்பினைச் சேர்க்க வேண்டும். தீயினை சற்று குறைத்துக் கொள்ள வேண்டும். உளுந்தம்பருப்பு பொன்னிறமாக விடவும்.
பின் காய்ந்த மிளக்காய் ஒன்றினைக் கிள்ளிப் போடவும். கிராம்பு, மிளகு, இஞ்சி ஆகியவற்றையும் சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு பொடியாக நறுக்கிய தக்காளி, பெருங்காயத்தூள், தேவையான அளவு உப்பினையும் சேர்க்கவும்.
தக்காளி மெல்லியதாக மாறும் வரை நன்கு வதக்கவும். பின் 6 முதல் 7 நிமிடம் வரை தீயினை மெதுவாக வைக்கவும். கலவையை ஆற வைத்த பிறகு, மிக்ஸியிலோ அல்லது உரலிலோ போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மைய அரைத்துக் கொள்ளவும்.
கடாயினை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்த பிறகு, அதில் கடுகு சேர்க்கவும். கடுகு நன்றாக வெடித்ததும் கறிவேப்பிலை, பெருங்காயம் சிறிதளவு, மிளகாய் 1 ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறவும்.
பிறகு அரைத்து வைத்த தக்காளி கலவையினைச் சேர்த்து கிளறவும். 3 முதல் 4 நிமிடம் மிதமான தீயில் விடவும். சுவையான தக்காளி சட்னி தயார்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதனை தோசை, இட்லி, தயிர் சாதம், சப்பாத்தி ஆகியவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
கருத்துகள் இல்லை