தேவையான பொருட்கள் :

                         * கொத்தவரங்காய்அரை கிலோ (நறுக்கியது)

                         * துவரம் பருப்பு 100 கிராம்

                         * கடலைப் பருப்பு100 கிராம்

                         * காய்ந்த மிளகாய்3

                        * மஞ்சள் தூள்அரை டீஸ்பூன்

                        * சாம்பார் தூள்கால் டேபிள் ஸ்பூன்

                        * பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை

                        * தேங்காய் துருவல் அரை கப்

                        * எண்ணெய்தேவைக்கேற்ப

                        * கடுகு 1 டீஸ்பூன்

                        * கறிவேப்பிலை ஒரு கொத்து

                         * உப்பு தேவைக்கேற்ப

செய்முறை :

                             துவரம் பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பின் அதை களைந்து, நீரை வடிகட்டி விட்டு, அத்துடன் மிளகாய், பெருங்காய்த்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து லேசாக அரைத்து எடுக்கவும்.

                           அரைத்தவற்றை இட்லி தட்டில் வைத்து ஆவியில் 7 முதல் 10 நிமிடங்கள் வரை வேகவிட்டு எடுத்து ஆறவிடவும். ஆறிய பின் நன்றாக உதிர்த்துக் கொள்ளவும்.

                            கொத்தவரங்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், சிறிது உப்பு போட்டு, காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீரை விட்டு வேக விடவும். காய் வெந்ததும் நீரை வடிகட்டி கொள்ளவும்.

                             ஒரு வாணலியில் எண்ணை விட்டு கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலையைச் சேர்க்கவும். அத்துடன் உதிர்த்து வைத்துள்ள பருப்பைப் போட்டு சிறிது நேரம் கிளறி விடவும்.

                             பின் அதில் வேக வைத்தக் காயைப் போட்டு ஓரிரு நிமிடங்கள் நன்றாகக் கிளறவும். கடைசியில் தேங்காய்த்துருவலைப் போட்டு மீண்டும் சில நிமிடங்கள் கிளறி இறக்கி வைக்கவும்.

                            இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இது தோசை மற்றும் சப்பாத்திக்கு ஏற்றதாக இருக்கும்.

கொத்தவரங்காய் பருப்பு உசிலி செய்முறை

கருத்துகள் இல்லை