தேவையான பொருட்கள் :
* கொத்தவரங்காய்கால் கிலோ (பெரியதாக நறுக்கியது)
* பெரிய வெங்காயம்1 (நறுக்கியது)
* தக்காளி1 (நறுக்கியது)
* புளி நெல்லிக்காய் அளவு
* கறிவேப்பிலைஒரு கொத்து
* கொத்துமல்லி தழைஒரு கைப்பிடி
* உப்புதேவைக்கேற்ப
* நல்லெண்ணெய்தேவைக்கேற்ப
* அரைக்க தேவையான பொருட்கள்:
* தேங்காய் - அரை கப்
* மிளகாய் பொடி - கால் டேபிள் ஸ்பூன்
* மல்லி பொடி - முக்கால் டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் பொடி - அரை டீஸ்பூன்
தாளிக்க :
* எண்ணெய் - தேவைக்கேற்ப
* கடுகு - அரை டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்
* கடலை பருப்பு - அரை டீஸ்பூன்
* பெருங்காயம் - ஒரு சிட்டிகை
செய்முறை :
கொத்தவரங்காயை தண்ணீரில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் தேங்காய், மிளகாய் பொடி, மல்லி பொடி, மஞ்சள் பொடி ஆகியவற்றை சிறிது தண்ணீர் விட்டு அரைத்து எடுத்து கொள்ளவும்
வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கி, பின் வெங்காயம், தக்காளி, தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.
இதனுடன் மிக்ஸியில் அரைத்த கலவையை சேர்த்து, தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். பாதி கொதி வந்ததும் வேகவைத்த கொத்தவரங்காயை சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதி வந்ததும் புளி கரைசலை சேர்த்து பின் 5 நிமிடம் கொதிக்க விடவும்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இந்த குழம்பை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.
கருத்துகள் இல்லை