தேவையான பொருட்கள் :
* கேரட் அரை கிலோ
* தேங்காய் துருவல்அரை கப்
* கடுகு 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு அரை டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் 1 சிட்டிகை
* பச்சை மிளகாய் 2 (நறுக்கியது)
* கறிவேப்பிலை ஒரு கொத்து
* எண்ணெய் தேவைக்கேற்ப
* உப்பு தேவைக்கேற்ப
செய்முறை :
முதலில் கேரட்டை நீரில் கழுவி, துருவி அல்லது பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு அதில் கேரட்டை சேர்த்து, கால் கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து, மூடி வைத்து, மிதமான தீயில் தண்ணீர் வற்றும் வரை அடுப்பில் வைத்து வேக வைக்க வேண்டும்.
பிறகு தண்ணீரானது முற்றிலும் வற்றியதும், அதில் துருவிய தேங்காயை சேர்த்து பிரட்டி இறக்கினால், கேரட் பொரியல் ரெடி.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை சாதம் மற்றும் ரசத்துடனும் வைத்து சாப்பிடலாம்.
கருத்துகள் இல்லை