தேவையான பொருட்கள் :
* சிறிய கத்தரிக்காய்கால் கிலோ
* புளிஎலுமிச்சை அளவு
* தேங்காய் துருவல்1 கப்
* சாம்பார் பொடி1 டேபிள் ஸ்பூன்
* நல்லெண்ணெய்தேவைக்கேற்ப
* தண்ணீர்தேவைக்கேற்ப
* கறிவேப்பிலைஒரு கொத்து
* கடுகு அரை டீஸ்பூன்
* மஞ்சள்தூள்1 டீஸ்பூன்
* பெருங்காயத்தூள்2 சிட்டிகை
* உப்புதேவைக்கேற்ப
செய்முறை :
கத்தரிக்காயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும். புளியை தண்ணீர் விட்டு நன்கு கரைத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளித்து கத்தரிக்காயை போட்டு மிதமான தீயில் வதக்கவும்.
கத்தரிக்காய் வதங்கியதும் சாம்பார் பொடியை சேர்க்கவும். பிறகு நன்றாக வதக்கி புளி தண்ணீரை ஊற்றி உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். இவை நன்றாக சேர்ந்து கொதித்ததும் எண்ணெய் பிரிந்து மேலே வரும்போது தேங்காய் துருவலை அரைத்து ஊற்றி, கொதிக்க விட்டு இறக்கவும்.
மணமணக்கும் எண்ணெய் கத்திரிக்காய் ரெடி! அனைவரும் விரும்பி சாப்பிடுவதற்கு மிக ஏற்றது.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சாதம்.
கருத்துகள் இல்லை