தேவையான பொருட்கள் :
* கோவக்காய்கால் கிலோ
* வெங்காயம்2
* தக்காளி1
* புளிஎலுமிச்சையளவு
* வறுத்து அரைக்க:
* காய்ந்த மிளகாய் - 2
* தனியா - 1 டேபிள் ஸ்பூன்
* அரிசி - ஒரு டீஸ்பூன்
* கடலைப்பருப்பு - அரை டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - அரை டீஸ்பூன்
* தேங்காய் துருவல் - 1 கப்
* பொட்டுக்கடலை - அரை டேபிள் ஸ்பூன்
தாளிக்க:
* எண்ணெய் - தேவைக்கேற்ப
* காய்ந்த மிளகாய் - 2
* பச்சை மிளகாய் - 2
* பூண்டு பல் - 2
* கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி
செய்முறை :
வெங்காயம், தக்காளி, கோவக்காயை நறுக்கி வைத்துக் கொள்ளவும். புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வறுத்து அரைக்க வேண்டிய பொருட்கள் எல்லாவற்றையும் வறுத்து ஒரு தட்டில் ஆறவைக்கவும்.
ஆறியதும் வறுத்த பொருட்களை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய், பூண்டு போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
பிறகு அதில் கோவக்காயை சேர்த்து நன்றாக வதக்கவும்.
கோவக்காய் வதங்கியதும் அதனுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி காயை வேகவைக்கவும்.
காய் பாதி அளவு வெந்தததும் வறுத்து அரைத்த விழுதை சேர்த்து நன்கு கொதிக்கவிட்ட பிறகு கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை வடிகட்டி ஊற்றவும். தேவைக்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
நன்றாக கொதித்து குழம்பு பதத்திற்கு கெட்டியாகும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
கருத்துகள் இல்லை