தேவையான பொருட்கள் :
* அவரைக்காய் அரை கிலோ
* பெரிய வெங்காயம் 3
* பச்சை மிளகாய் 5 (கீறியது)
* மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
* உப்புதேவைக்கேற்ப
* தண்ணீர்தேவைக்கேற்ப
* வறுத்துப்பொடி செய்து கொள்ள வேண்டிய பொருள்கள் :
* வேர்க்கடலை - ஒரு கைப்பிடியளவு
* அரிசி - அரை டேபிள் ஸ்பூன்
தாளிக்க:
* கடுகு - அரை டிஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 3 டிஸ்பூன்
* கறிவேப்பிலை - ஒரு கொத்து
* பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
* சோம்பு - ஒரு சிட்டிகை
* எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை :
அவரைக்காயை நறுக்கிக்கொள்ளவும். அரிசியையும், வேர்க்கடலையும் எண்ணெய் இல்லாமல் வறுத்து, அரைத்துக் கொள்ளவும். தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்கவும். பின் நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாயை போட்டு வதக்கி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
இப்போது அவரைக்காயை சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேக விடவும். காய் நன்கு வெந்ததும், அரைத்து வைத்த வேர்க்கடலை, அரிசி பொடி சேர்த்து கிளறி 15 நிமிடம் கழித்து இறக்கவும்.
சுவையான அவரைக்காய் பொரியல் ரெடி.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சாதம், பருப்பு சாதம்.
கருத்துகள் இல்லை