தேவையான பொருட்கள் :
* கேரட் கால் கிலோ
* துவரம் பருப்பு அரை கப் (வேக வைத்தது)
* வெங்காயம் 1
* தக்காளி1 (நறுக்கியது)
* கறிவேப்பிலைஒரு கொத்து
* கொத்தமல்லி இலைஒரு கைப்பிடி
* புளிச்சாறுகால் கப்
* சாம்பார் பொடிஅரை டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள்கால் டீஸ்பூன்
* உப்பு தேவைக்கேற்ப
* தண்ணீர் தேவைக்கேற்ப
* எண்ணெய்தேவைக்கேற்ப
* கடுகுஅரை டீஸ்பூன்
* வெந்தயம் கால் டீஸ்பூன்
* பெருங்காயத் தூள்1 சிட்டிகை
செய்முறை :
முதலில் ஒரு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, பின் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்பு அதில் கேரட் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.
பிறகு தீயை குறைத்து, அதில் மஞ்சள் தூள் மற்றும் சாம்பார் பொடி சேர்த்து சிறிது நேரம் பிரட்டி, பின் தீயை அதிகரித்து, புளிச்சாறு, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து, பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் அதில் துவரம் பருப்பை சேர்த்து, சாம்பார் சற்று கெட்டியான பின், அதில் கொத்தமல்லி இலை தூவி இறக்கினால், கேரட் சாம்பார் ரெடி.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதனை சாப்பாடு மற்றும் தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம்.
கருத்துகள் இல்லை