தேவையான பொருட்கள் :
* சுரைக்காய்கால் கிலோ
* பாசிப்பருப்புஅரை கப்
* உப்பு தேவைக்கேற்ப
அரைப்பதற்கு:
* துருவிய தேங்காய் - அரை கப்
* மிளகாய் வற்றல் - 2
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
தாளிக்க :
* எண்ணெய் - தேவைக்கேற்ப
* கடுகு -அரை டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை :
முதலில் ஒரு பாத்திரத்தில் சுரைக்காய் மற்றும் பாசிப்பருப்பை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி வைத்து 20 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
துருவிய தேங்காய் மற்றும் மிளகாய் வற்றல், சீரகம், மஞ்சள் தூள் சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அரைத்த பேஸ்ட்டை அடுப்பில் வெந்து கொண்டிருக்கும் பருப்புடன் சேர்த்து கிளறி, 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, இறக்கி வைத்துள்ள பருப்புடன் சேர்க்கவும். இப்போது சுவையான சுரைக்காய் கூட்டு தயார்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : ரச சாதம் மற்றும் சாதத்திற்கு அருமையாக இருக்கும்.
கருத்துகள் இல்லை