தேவையான பொருட்கள் :
* துவரம்பருப்புமுக்கால் கப்
* மஞ்சள்தூள்அரை டீஸ்பூன்
* வெங்காயம்1
* தக்காளி2
* கீறிய பச்சை மிளகாய்2
* பொடியாக நறுக்கிய கொத்தமல்லி1 டேபிள் ஸ்பூன்
* உப்புதேவைக்கேற்ப
அரைக்க:
* தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
* பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்
* தக்காளி - 1
* சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
* பெருங்காயத் தூள் - கால் டீஸ்பூன்
தாளிக்க:
* கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்
* நெய் - 3 டீஸ்பூன்
* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* காய்ந்த மிளகாய் - 1
செய்முறை :
துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேகவைக்கவும். வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கவும். அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும். பாத்திரத்தில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தில் பாதி + தக்காளி + பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின் அரைத்த விழுது, உப்பு, அரை கப் நீர் சேர்த்து கொதிக்கவிடவும். பச்சை வாசனை அடங்கியதும் வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து மீதமுள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கி சேர்க்கவும்.
பின் குறிப்பு : சின்ன வெங்காயம் சேர்த்து செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
சாம்பார் இன்னும் வாசனையாக இருக்க தாளிப்பில் சீரகத்தை மறக்காமல் சேர்க்கவும். இதில் விரும்பினால் முருங்கைக்காய், கத்திரிக்காய் சேர்த்து செய்யலாம்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் :இந்த சாம்பார், இட்லி, தோசை, சப்பாத்தி, வெண்பொங்கல், ஊத்தாப்பம் என அனைத்திற்கும் நன்றாக இருக்கும்.
கருத்துகள் இல்லை