தேவையான பொருட்கள் :
* நறுக்கிய கொத்தவரங்காய்கால் கிலோ
* பெரிய வெங்காயம்1(நறுக்கியது)
* தேங்காய் துருவல் 1 கப்
* வறுத்துப் பொடித்த வேர்க்கடலை 2 டேபிள் ஸ்பு+ன்
* மிளகாய்தூள்1 டேபிள் ஸ்பூன்
* சர்க்கரைஅரை டீஸ்பூன்
* உப்புதேவைக்கேற்ப
* கடுகுஅரை டீஸ்பூன்
* சீரகம்அரை டீஸ்பூன்
* மஞ்சள் தூள்அரை டீஸ்பூன்
* எண்ணெய்தேவைக்கேற்ப
செய்முறை :
கொத்தவரங்காயை காய் முழுகும் வரை தண்ணீர்விட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம், மஞ்சள்தூள் சேர்க்கவும். நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின் அவற்றுடன் கொத்தவரங்காயை சேர்த்து வதக்கவும். பின்பு மிளகாய் தூள், வேர்க்கடலை தூள், தேங்காய், சர்க்கரையைச் சேர்த்துக் கிளறவும். நன்றாக வெந்தவுடன் இறக்கவும்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதனை சாதம் மற்றும் சப்பாத்திக்கு வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.
கருத்துகள் இல்லை