ஃப்ளூ காய்ச்சல் என்றால் என்ன? :
ஃப்ளூ என்று பொதுவாக அழைக்கப்படும் இன்ஃப்ளூயன்சா என்பது ஒரு வைரஸ் காய்ச்சல். மழைக்காலத்தில் பரவுகிற காய்ச்சல்களில் முதன்மையானது புளூ காய்ச்சல்.
நோய்க்கான காரணங்கள் :
மூச்சுக் குழல் எனப்படும் சுவாசக் குழலைப் பாதிக்கும் மற்ற வைரஸ்களைவிட இன்ஃப்ளூயன்சா வைரஸ், தீவிரமாக நோய்க்கிருமிகளையும், சிக்கல் நிறைந்த நோய்த்தன்மையையும் கொண்டது. இது மூக்கு, தொண்டை மற்றும் நுரையீரல் ஆகிய உறுப்புகளைத் தாக்குகிறது. இதனால் நோய் உண்டாகிறது.
சிகிச்சை :
இன்ஃப்ளூயன்சா காய்ச்சலை குறைக்காமல் அதன் முழுக்காலத்தை கடக்கவிடுவதே சிறந்தது, ஆனால் குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் சிகிச்சை அவசியம் தேவை. இது பிறருக்கு தொற்றாமல் இருக்க பாக்டீரியா - தடுப்பு சோப்பை பயன்படுத்தி அடிக்கடி கை கழுவுதல் நலம்.
தடுக்கும் முறைகள் :
* குடிநீரை நன்றாக கொதிக்க வைத்து ஆறியப் பின் அருந்த வேண்டும்.
* பழைய உணவுகள், குளர்ச்சியான உணவு வகைகளை எடுத்துக்கொள்ளக்கூடாது.
* குழந்தைகளுக்கு புளூ காய்ச்சல் வந்தால், வலிப்பு ஏற்படலாம். எனவே, திரவ உணவுகளை அடிக்கடி கொடுக்க வேண்டும். உடனடியாக மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும்.
உணவு முறை :
* தண்ணீர், பழச்சாறுகள் மற்றும் திரவ உணவுகளை அதிகம் உட்கொள்ளுதல் அவசியம்.
* அதிக திரவங்களை உட்கொண்டால் எலும்பு உட்புழை மற்றும் நுரையீரலில் உள்ள சளிச்சவ்வு மெலிதடைந்து உடலிலிருந்து விரைவில் வெளியேறும்.
கருத்துகள் இல்லை