மாரடைப்பு ஏற்படக் காரணங்கள் :
* புகைப்பிடித்தல்
* சர்க்கரை நோய்
* உயர் இரத்த அழுத்தம்
* அதிக உடல் பருமன் மற்றும் நன்மை செய்யும் கொழுப்பு (HDL) குறைவாக இருத்தல்
* அதிக கொலஸ்ட்ரால்
* குடும்பத்தில் பலருக்கு தொன்றுதொட்டு மாரடைப்பு இருத்தல்
* மன அழுத்தம், அதீத கோபம் மற்றும் படபடப்பு
* மரபியல் காரணிகள்
* உடல் உழைப்பு இல்லாமை.
{ இந்த அறிகுறிகள் இருப்பின்> மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம்.}
மாரடைப்பு வாரமல் தடுக்கும் முறைகள் :
* அவர்கள் உண்ணும் உணவுகள் ஆரோக்கியமாகவும், உப்பு & கொழுப்புப் பொருட்கள் குறைவாகவும் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் & நார்ச் சத்துகள் அதிகமாகவும் இருக்க வேண்டும்.
* அளவு மீறிய உடல் எடை உடையவர்கள் உடல் எடையைக் குறைத்தல் வேண்டும்.
* புகைப்பிடித்தலை முழுவதுமாகக் கட்டாயம் நிறுத்த வேண்டும்.
* உடற்பயிற்சிகளை வழக்கமாகச் செய்தல் வேண்டும்.
மாரடைப்பு வந்தபின் காக்கும் முறைகள் :
* மாரடைப்பு என சந்தேகித்ததும் மருத்துவரால் செய்யப்படும் முதலுதவி, நோயாளிக்கு ஆக்சிஜன் கொடுப்பது, ஆஸ்பிரின் மாத்திரை தருவது, நாக்கின் அடியில் வைக்கப்படும் மாத்திரை தருவது. நெஞ்சு வலியும், மனப்பதட்டமும் குறைய மருந்துகள் இவை அனைத்தையும் பின்பற்ற வேண்டும்.
* இருதய துடிப்பு அதிவேகமாகவோ அல்லது மிகவும் குறைவாகவோ இருக்கும் போது செய்யப்படும் உயிர்காக்கும் சிகிச்சை முறை மூலம் மட்டுமே மாரடைப்பால் ஏற்படும் வலியை குறைக்கலாம்.
* மாரடைப்பின் தாக்கத்தையும், தீவிரத்தையும் கட்டுப்படுத்தலாம். உரிய நேரத்தில் முதலுதவி பெறுவதால், மாரடைப்பால் நேரும் திடீர் மரணங்களை தவிர்க்கலாம்.
உணவுமுறைகள் :
* மீன்
* பூண்டு
* பருப்பு வகைகள்
* பீன்ஸ்
* தண்ணீர்
உடற்பயிற்சிகள் :
* தியானம்
* மூச்சிபயிற்சி
மாரடைப்பு வரும்போது கொடுக்கப்படவேண்டிய முதலுதவி :
* சிறந்த மருத்துவ உதவி கிடைக்கும் வரை, நோயாளியின் இறுக்கமான உடைகளைத் தளர்த்தி அவரை படுக்க வைத்திருக்க வேண்டும்.
* ஆக்ஸிஜன் சிலிண்டர் இருந்தால் நோயாளிக்கு கட்டாயம் செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை