காசநோய் வந்தப்பின் காக்கும் முறைகள் :
* மூன்று வாரங்களுக்கு மேல் இருமல் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவும்.
* மக்கள் நெரிசலான இடங்கள், சூரிய வெளிச்சம் உள்வராத வீடுகள் இந்நோய் பரவுவதை ஊக்குவிக்கின்றன.
* ஆரோக்கியமான உணவுப்பழக்கங்கள், போதுமான அளவு உடற்பயிற்சி இவைகளால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யலாம்.
* பசும்பாலினால் பரவும் காசநோயைத் தவிர்க்க நன்கு கொதிக்க வைத்த பால் அல்லது பதனிட்ட பாலை அருந்தவும்.
* மருத்துவர்களின் ஆலோசனைப்படி காச நோயாளிகள் தவறாமல் 6 மாதத்திற்கு மாத்திரைகள் சாப்பிட்டால் குணமாகிவிடும்.
* நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தும்மல், இருமல் வரும்போதும், பேசும்போதும் கைக்குட்டையால் வாயை மூடிக் கொள்ள வேண்டும்.
* அந்த துணியை தனியாக துவைத்துக் காய வைக்க வேண்டும்.
* கண்ட கண்ட இடங்களில் துப்பக் கூடாது.
* குடும்பத்தில் ஒருவருக்கு காசநோய் ஏற்பட்டால், அவர் பாதுகாப்புடனும், எச்சரிக்கையாகவும் இருந்தால் மற்றவர்களுக்கு பரவாமல் பாதுகாக்கலாம்.
* காசநோய்க்கு உண்டான மருந்துகளை சரியான அளவில் மருத்துவர் சொல்லும்வரை நடுவில் நிறுத்தாமல் சாப்பிட வேண்டும். நடுவில் நிறுத்துவதால் மறுபடி இந்நோய் தீவிரமாக வளர வாய்ப்பு ஏற்படும்.
கருத்துகள் இல்லை