நெஞ்சுவலி என்றால் என்ன?
* இதயத் தமனிக் குழாய் உள்அளவில் சுருங்கும்போது, இதயத் திசுக்களுக்குச் செல்லக்கூடிய இரத்தத்தின் அளவு குறைகிறது.
* நாம் ஓய்வாக இருக்கும்போது இதயத் திசுக்களுக்குத் தேவையான இரத்தம் கிடைத்துவிடும். ஆனால், உழைப்பு அதிகமாகும்போது இதயத் தசைகளின் தேவையும் அதிகரிக்கிறது.
* குறுகிவிட்ட இதயத் தமனியால் இந்தத் தேவையை ஈடுசெய்ய இயலாது.
* இதனால் இதயத் திசுக்களுக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் உணவு கிடைக்காமல் அழியத் தொடங்கும்.
* அந்த நேரத்தில் இதயத் தசைகள் எழுப்புகிற கூக்குரலே நெஞ்சு வலியாக உணரப்படுகிறது.
நெஞ்சுவலி ஏற்படக் காரணங்கள் :
* புகைபிடிப்போர், மது அருந்துவோர், உயர் இரத்த அழுத்தம், இரத்த மிகைக் கொழுப்பு, நீரிழிவு நோய், இதயத்தசை அழற்சி போன்ற நோய்களைக் கொண்டவர்கள், உடற்பயிற்சி இல்லாதவர்கள், உடலுழைப்பே இல்லாதவர்கள், ஓய்வின்றிக் கடுமையாக உழைப்பவர்கள், பரபரப்பான வாழ்க்கை முறையைக் கையாள்கிறவர்கள், முதியோர் ஆகியோருக்கு இந்த வகையான நெஞ்சு வலி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
* குடும்பத்தில் சண்டை, இழப்பு, பொருளாதார நெருக்கடி, வேலைப் பளு, வேலையின்மை, தனிமை, வாழ்க்கையில் தோல்வி, தேர்வு பயம், கோபம் போன்ற காரணங்களால் ஏற்படுகிற மனச்சோர்வு, மன அழுத்தம், மனப்பதற்றம், பரபரப்பான வாழ்க்கைமுறை ஆகியவற்றாலும் நெஞ்சு வலி ஏற்படுகிறது.
நெஞ்சுவலி வாரமல் தடுக்கும் முறைகள் :
* புகைபிடித்தல், மது அருந்துதல் பான்மசாலாவைப் பயன்படுத்துல் ஆகியவற்றை தவிர்த்தல் வேண்டும்.
* சரியான உடல் எடை இருத்தல் வேண்டும்.
* தினமும் முறையாக உடற்பயிற்சி, யோகாசனம், தியானம் செய்ய வேண்டும்.
* உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், கொழுப்புக் கோளாறு போன்றவற்றுக்குச் சரியான சிகிச்சை எடுத்து, அவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.
* கொழுப்பு உணவைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
* அசுத்தமான உணவைச் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
* நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் சாப்பிட்டதும் படுக்கக் கூடாது. படுக்கையின் தலைப் பகுதியை அரை அடியிலிருந்து ஒரு அடிவரை உயர்த்திக்கொள்ள வேண்டும்.
* மன அழுத்தம் தவிர்த்தல் வேண்டும்.
* தேவையான அளவுக்கு ஓய்வும் உறக்கமும் இருத்தல் வேண்டும்.
* மாசடைந்த சுற்றுச்சூழலைத் தவிருங்கள். அசுத்தமான காற்றுதான் பல நுரையீரல் நோய்களுக்குக் காரணம்.
நெஞ்சுவலிக்கு முதலுதவி :
இந்த முதலுதவியைத் தொடர்ந்து எவ்வளவு விரைவாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுகிறோமோ அந்த அளவுக்கு உயிருக்கு ஆபத்து வருவதைத் தடுக்க முடியும்.
கருத்துகள் இல்லை