சின்னம்மை என்றால் என்ன?
* வெயில், மழை கலந்த சீதோஷ்ண நிலை தற்போது நிலவுவதால் வைரஸ்கள் வேகமாக பெருகி நோய்களை பரப்பி வருகின்றன. சளி, காய்ச்சல் தொடங்கி அம்மை உள்ளிட்ட பெரிய நோய்கள் வரை வைரஸ்களால் ஏற்படுகின்றன.
சின்னம்மை ஏற்படக் காரணங்கள் :
* வளிமண்டலத்தில் நிலவும் கடுமையான வெப்பத்தால், உடலில் வெப்பம் ஏற்படுகிறது.
* உடல் வெப்பத்துக்கும் அம்மை நோய்க்கும் தொடர்பில்லை. கோடை வெப்பத்தால் பூமி சூடாகும்போது, அசுத்தமான சுற்றுச்சூழல் உள்ள இடங்களில் கொட்டிக் கிடக்கிற குப்பை, கூளங்களில் வாழும் பல்வேறு கிருமிகள் உயிர்த்தெழுந்து, காற்று மூலம் பரவுகின்றன.
* இவற்றில் ஒன்றுதான் ஷவேரிசெல்லா ஜாஸ்டர் எனும் வைரஸ் கிருமி மூலமாகத்தான், சின்னம்மை நோய் ஏற்படுகிறது.
சின்னம்மையை வராமல் தடுக்கும் முறைகள் :
* குழந்தைக்கு 15 மாதங்கள் முடிந்ததும் முதல் தவணைத் தடுப்பூசியும், 5 வயதில் இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் போட வேண்டும்.
* ஆரம்பத்திலேயே இத்தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளாதவர்கள் 13 வயதுக்குள் இதைப் போடுவதாக இருந்தால், மூன்று மாத இடைவெளியில் இரண்டு தவணைகள் போட்டுக்கொள்ளலாம்.
* ஒரு தவணையை மட்டும் போட்டுக்கொண்டு, அடுத்த தவணையைப் போடாமல் விட்டவர்கள் மீண்டும் ஒரு தவணை மட்டும் போட்டுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் சின்னம்மை வராமல் தடுக்க முடியும்.
* சின்னம்மை நோய் வந்த பிறகு, இந்தத் தடுப்பூசியைப் போட்டால் பலன் தராது.
சின்னம்மையை வந்தபின் காக்கும் முறைகள்:
* இரண்டாம் முறை நுண்மப் பீடிப்பு ஏற்படாமல் தவிர்ப்பதற்கு உடலை ஆரோக்கியமான சூழலில் பராமரித்தல் வேண்டும்.
* தினமும் தோலை வெந்நீரினால் சுத்தம் செய்தல் முக்கிமான ஒன்றாகும்.
* சொறிந்தால் நோய்த்தொற்றின் ஆபத்து அதிகரிக்கும்.
{ இருப்பினும் மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம். }
சின்னம்மை உணவு முறைகள் :
* உணவில் எந்தக் கட்டுப்பாடும் தேவையில்லை. எல்லா உணவையும் வழக்கம்போல் சாப்பிடலாம்.
* அம்மை நோயாளியின் உடலில் நீரிழப்பு சற்று அதிகமாக இருக்கும் என்பதால் பால், நீர்மோர், கரும்புச்சாறு, இளநீர், ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை உள்ளிட்ட பழச்சாறுகள், அரிசிக்கஞ்சி, ஜவ்வரிசிக்கஞ்சி, சத்துமாவு, கூழ், குளுகோஸ், சத்துப்பானங்கள், உப்புச் சர்க்கரைக் கரைசல் போன்ற நீர்ச்சத்து நிறைந்துள்ள உணவை அதிகமாக எடுத்துகொள்ள வேண்டும்.
* வைட்டமின் ஏ சத்து நிறைந்த காரட், பப்பாளி, தக்காளி, பசலைக்கீரை போன்றவற்றையும் சாப்பிட வேண்டும்.
கருத்துகள் இல்லை