காச நோய் ஏற்படக் காரணங்கள் :

                      காச நோயானது மைக்கோ பாக்டீரியம் (Mycobacterium tuberculosis ) எனப்படும் ஒருவகைப் பாக்டீரியாவினால் ஏற்படும் ஒரு தொற்று நோய். Tuberculosis (TB) எனப்படும் இந்நோய் காற்றின் மூலம் பரவுகின்றது. சுவாசத்தின் மூலம் தொற்றும். இந்நோய்க்கிருமிகள் பெரும்பாலும் சுவாசப்பையில் நோயை ஏற்படுத்துகிறது. இது நுரையீரலையே அதிகம் பாதிக்கிறது. ஏனெனில் காசநோய் கிருமிகள் நோயாளியின் நுரையீரலில் வசிக்கும். நோயாளி தும்மினாலோ, இருமினாலோ, மூக்கைச் சிந்தினாலோ, சளியைத் துப்பினாலோ கிருமிகள் சளியுடன் காற்றில் பரவி மற்றவர்களுக்கு நோயை உண்டாக்கும். நோயாளியின் மூக்கு, வாய் போன்ற பகுதிகளில் இந்தக் கிருமிகள் ஒட்டிக்கொண்டிருக்கும். அந்த இடங்களைத் தொட்டுவிட்டு, அதே கைவிரல்களால் அடுத்தவர்களைத் தொட்டால் கிருமிகள் அவர்களுக்கும் பரவிவிடும்.  நோயாளி பயன்படுத்திய கைக்குட்டை, உடை, உணவுத்தட்டு, போர்வை, துண்டு, சீப்பு, தலையணை, கழிப்பறைக் கருவிகள் போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்தினால் நோய் எளிதாகப் பரவிவிடும். நோயாளி பேசும்போது கூட நோய்க் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு. காசநோய் கிருமிகள் நுரையீரல், நுரையீரல் உறை, குடல், குரல்வளை, எலும்பு, முதுகுத்தண்டுவடம், சிறுநீரகம், கண், தோல், மூளை, மூளை உறை, விந்துக்குழல், கருப்பை இணைப்புக் குழல், நிணநீர்ச் சுரப்பிகள் என்று பல உறுப்புகளைப் பாதிப்படையச் செய்கின்றன. எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காச நோய் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

காச நோய் ஏற்படக் காரணங்கள்

கருத்துகள் இல்லை