சைனஸ் நோய்க்கு முக்கியக் காரணங்கள்
* ஆரோக்கியக் குறைவு
* சுற்றுச்சூழல் மாசு
* ஒவ்வாமை
* பாக்டீரியா, வைரஸ், பூஞ்சைத் தொற்றுகள் மூலமாகச் சளி பிடிக்கும்போது சைனஸ் தொல்லை கொடுக்கிறது.
* மூக்குத் துவாரத்தை இரண்டாகப் பிரிக்கிற நடு எலும்பு வளைவாக இருப்பது, பாலிப் என அழைக்கப்படுகிற மூக்குச் சதை வளர்ச்சி ஆகியவை இந்தப் பிரச்சினையைத் தூண்டுகின்றன.
சைனஸ் பிரச்சனையை சமாளிக்க வழிகள் :
* மூக்கடைப்பைப் போக்க காலையிலும், இரவிலும் நீராவி பிடிப்பது நல்லது. இதனால் மூக்கில் உள்ள சளி இளகிச் சுலபமாக வெளியேறிவிடும்.
* தொற்றுக் கிருமிகள் இருப்பதாகத் தெரிந்தால் தகுந்த ஆன்ட்டிபயாடிக் மருந்துகளைச் சாப்பிடலாம்.
{ இருப்பினும் மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம். }
கருத்துகள் இல்லை