கிளாகோமா நோய் என்றால் என்ன?
கிளாகோமா என்பது ஒரு வகை கண் நோய். நமது கண்களில் குழாய் போன்ற அமைப்பு உள்ளது. இது கண்களின் கருவிழிப் பகுதிகள் மற்றும் லென்ஸ் ஆகியவற்றுக்கு ஒரு விதத் திரவத்தை எடுத்துச்செல்கிறது. இந்தத் திரவம் வரும் வழியிலோ அல்லது வெளியேறும் வழியிலோ தடை ஏற்பட்டால், கண்ணுக்குள் திரவத்தின் அழுத்தம் அதிகமாகி, கண்ணில் உள்ள நரம்புகள் பாதிக்கப்பட்டு, பார்வைத் திறன் குறைய ஆரம்பிக்கும். இதுதான் கிளாகோமா அல்லது கண் அழுத்த நோய் எனப்படுகிறது.
கிளாகோமா நோய் சிகிச்சை முறை :
* கண் அழுத்தத்தைச் சீராக வைத்துக்கொள்ளக் கண் சொட்டு மருந்துகள் உள்ளன. அதை தவறாமல் பயன்படுத்தினால், கண் அழுத்தத்தைச் சீராக வைத்திருக்கலாம். இந்தச் சொட்டு மருந்தை வாழ்நாள் முழுவதும் பயன்படுத்த வேண்டும்.
* லேசர் சிகிச்சை மூலமும் கண் அழுத்தத்தைக் குறைக்க முடியும்.
* கிளாகோமா நோயாளிகள் பலருக்கும் அறுவைசிகிச்சைதான் சிறந்த தீர்வாக இருக்கும்.
{ இருப்பினும் மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம். }
கருத்துகள் இல்லை