தொழு நோய் என்றால் என்ன ?
தொழு நோய் மனிதர்கள் மூலமே பரவுகின்ற ஒரு நோயாகும். தொழுநோய் ஏற்பட்ட மனிதன் அதற்கான சிகிச்சை பெறாததால் அவன் உடம்பில் உள்ள அதிகக் கிருமியினால் அந்த மனிதன் தும்மும் போதும், இருமும் போதும் வெளிப்படும் கிருமிகளாலேயே தொழுநோய் பரவுகிறது.தொழுநோயைக் கண்டறிந்தவர் :
தொழு நோய் மைக்கோபேக்டீரியம் என்கிற குச்சி வடிவிலான கண்ணுக்குத் தெரியாத கிருமியால் உண்டாகிறது என்பதை 1873-ல் டாக்டர் ஹேன்ஸன் என்பவர் கண்டறிந்தார்.தொழுநோய் வருவதற்க்கான காரணங்கள் :
* “மைக்கோபேக்டீரிம்” என்ற கிருமி அல்லது தொழு நோய் கிருமி (இந்தகிருமியைக் கண்டு பிடித்தவர் (ஹேன்சன் என்ற விஞ்ஞனி). காற்றின் மூலம் பரவுகிறது. சிகிச்சை எடுக்காத நோயாளி தும்பும் போதும், இரும்பும் போதும் கோடிக்கணக்கான தொழுநோய் கிருமிகள் காற்றில் பரவுகிறது.* தொழுநோய்கிருமிகளை எதிர்க்க கூடிய சக்தி இல்லாத எவருக்கும் தொழுநோய் வரும்.
{ இருப்பினும் மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம். }
தொழு நோய்க்கான சிகிச்சை :
* தொழுநோய்க்கு சிகிச்சை தற்போது அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அளிக்கப்படுகிறது.* தொழுநோய்க்கிருமிகள்காற்றின் மூலம் பரவுகிறது. நோய்கிருமிகளை ஒவ்வொருவரும் சுவாசம் மூலம் பெரும் வாய்ப்புள்ளது. இருப்பினும் நோய் எதிர்ப்பு சக்தி 100க்கு 98 பேருக்கு இயற்கையாகவே உள்ளது. தடுப்பு மருந்து இல்லை. தொழுநோய்க்கு சிகிச்சை தற்போது அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அளிக்கப்படுகிறது.
தொழு நோய்க்கான மருத்துவம் :
* பீர்க்கன் காயின் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் தோல் நோய், தொழுநோய் முதலியவற்றுக்குச் சக்தி வாய்ந்த மேல் பூச்சு எண்ணெய்யாய்த் திகழ்கிறது. சத்தான காய்கறிகளையும், பழங்களையும் உண்ணுதல் வேண்டும்.* வல்லாரைக்கீரை சாறு தொழுநோய்க்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது.
கருத்துகள் இல்லை