டைபாய்டு காய்ச்சல் என்றால் என்ன? :
* டைபாய்டு காய்ச்சல் சால்மோனெல்லா டைபை என்னும் பாக்டீரியாவால் வருகிறது.
* அசுத்தமான குடிநீர், உணவு மூலமாக இந்த கிருமிகள் உடலுக்குள் ஊடுருவுகின்றன. டைபாய்டு காய்ச்சலுக்குக் ";குடற்காய்ச்சல்்"; (Enteric Fever) என்று வேறு ஒரு பெயரும் உண்டு. காரணம், இந்த நோயை உண்டாக்கும் பாக்டீரியா கிருமிகள் சிறுகுடலில் வசித்து, அங்கேயே வளர்ந்து, காய்ச்சலை உண்டாக்குவது தான்.
டைபாய்டு காய்ச்சல் பரிசோதனை :
* WIDAL TEST என்பது டைபாய்டை கண்டுபிடிக்க உதவும் ஆய்வக பரிசோதனை.
* நோய் தாக்கப்பட்டு 7 நாட்கள் கழித்தே இந்த சோதனையை மேற்கொள்ள வேண்டும், இல்லையென்றால் இது Positive என்று வரும்.
டைபாய்டு காய்ச்சல் உணவு முறை :
* காரம் இல்லாத எளிதில் செரிக்க கூடிய உணவை மட்டுமே உண்ண வேண்டும். பட்டினி போடவே கூடாது, வயிற்றில் உணவு இருந்தால் மட்டுமே குடல் புண் சீக்கிரம் ஆறும்.
* நீர் சத்து உடலில் குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
* காய்ச்சல் குறைந்த பின் ANTIBIOTIC மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* புழுங்கல் அரிசி கஞ்சியை வடிகட்டி கஞ்சித்தண்ணீரை மட்டும் சிறிது உப்பு சேர்த்து காலையில் மற்றும் மதிய வேளையில் சாப்பிடுவது நல்லது.
* நிலவேம்பு, நன்னாரி, சீந்தில், திராட்சை, நெல்லி வற்றல், அதிமதுரம், விளாமிச்சம்வேர் ஆகியவற்றை கஷாயம் செய்து குடித்தால் குணமாகும்.
டைபாய்டு மருத்துவம் :
* டைபாய்டு காய்ச்சல் வராமல் தடுக்க இரண்டு வகை தடுப்பூசிகள் உள்ளன. விஐ கேப்சுலர் பாலிசாக்கரைடு தடுப்பூசி என்று ஒன்று. விஐபிஎஸ் டிடி இணைக் கூட்டுப்பொருள் தடுப்பூசி என்பது இன்னொன்று. விஐபிஎஸ் தடுப்பூசி போடும் முறை குழந்தைக்கு 2 வயது முடிந்ததும் இந்தத் தடுப்பூசியைப் போட்டுவிட வேண்டும்.
* குழந்தையில் போடாதவர்கள் எப்போது வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம்.
டைபாய்டு காய்ச்சல் தடுக்கும் முறைகள் :
* கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதிலும் கழிப்பறைக்குச் சென்று வந்த பிறகு கைகளை நன்கு சோப்பு போட்டுக் கழுவ வேண்டும்.
* குடிநீரை நன்கு கொதிக்கவைத்து ஆறவைத்துக் குடிக்க வேண்டும்.
* காய்கறி மற்றும் பழங்களை நன்றாகக் கழுவி சுத்தப்படுத்திய பிறகே சமையலுக்கும் சாப்பிடவும் பயன்படுத்த வேண்டும். வீடுகளிலும் தெருக்களிலும் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை