இளம்பிள்ளை வாதம் என்றால் என்ன?
* இளம்பிள்ளை வாதம் பாதிக்கப்பட்டவரின் மலத்தின் வழியாகப் பரவும் நுண்மத் தொற்றுநோய் ஆகும்.
* மலத்துகள்களினால் மாசடைந்த நீர், அல்லது உணவு வாய்வழியாக உட்கொள்ளப்படும்போது இந்நோய் தொற்றுகிறது
* இது போலியோ என்னும் ஆங்கிலப் பெயராலும் பரவலாக அழைக்கப்படுகின்றது. போலியோமியெலிட்டிஸ் என்பது இந்நோயின் மருத்துவப் பெயர் ஆகும்.
இளம்பிள்ளை வாதம் வராமல் தடுக்கும் முறைகள் :
* உங்களையும் மற்றும் உங்கள் சுற்றுச்சூழலையும் சுத்தமாக வைத்துக்கொள்ளுதல் வேண்டும்.
* பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடுதல் வேண்டும்.
* ஊட்டச்சத்துள்ள ஆகாரத்தை உட்கொள்ளுதல்.
* கருவில் குழந்தை வளரும்போது தாய்க்கு எந்தவிதமான மன அழுத்தம், மன உளைச்சல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* மலச்சிக்கல் ஏற்படுத்தும் உணவுகளை தவிர்ப்பது நல்லது. வாயுவை உண்டாக்கும் பொருட்களை சாப்பிடக்கூடாது.
இளம்பிள்ளை வாதம் வந்தபின் காக்கும் முறைகள் :
* இளம்பிள்ளை வாதம் அதிக நாள் நீடித்திருக்கக் கூடியது என்பதால் வீட்டில் சிகிச்சை செய்வது நல்லது.
* இந்நோய் கண்டவுடன் படுக்கவைத்து ஓய்வு தர வேண்டும்.
* மெல்லிய தலையனைகளை தலைக்கும் தோள்பட்டைக்கும் வைக்க வேண்டும். தோள்பூட்டு அசையாமல் 75° கோணத்தில் இருக்கவேண்டும்.
* கால்கள் முழங்காலுடனும் விரல்களுடனும் மேலே பார்த்தப்படி இருக்கவேண்டும்.
* முழங்கால்கள் இரண்டு அங்குளம் விலகி இருக்கவேண்டும்.
* தசைகள் வாடமல் இருப்பதற்க்காக வெந்நீர் ஒற்றடம் கொடுக்க வேண்டும்.
* படுத்துக்கொண்டு காலைத் தூக்கும் நிலைமை வரும் வரை படுத்து இருக்க வேண்டும். நடக்ககூடாது.
* இந்நோயின் வைரஸ் பிறரையும் பாதிக்கும். ஆதலால் மூன்று வார காலம் நோயாளியின் மலசலங்களைக் கொளுத்தி வர வேண்டும்
* பாதங்கள் கால்களுக்குச் சரியான நேர்க்கோண்த்தில் இருக்கவேண்டும்.
{ இருப்பனும்> மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம். }
இளம்பிள்ளை வாதநோய் கண்டறிதல்:
* இளம்பிள்ளைவாதத் தொற்று நோய் இருந்தால் மூளைத் தண்டுவட பாய்மத்தில் பொதுவாக வெள்ளணுக்களின் எண்ணிக்கை அதிகமாய் இருக்கும்.
இளம்பிள்ளை வாத சிக்கல்கள் :
* நிரந்தரமான தசை வாதமும், இடுப்பு, கணுக்கால், மற்றும் பாதங்களின் குறைபாடுகளும், ஊனமும், இளம்பிள்ளை வாதத்தினால் உண்டாகும்.
* நுரையீரல் அழற்சி
* இதயக்கீழறை மிகுவழுத்தம்
* அசைவின்மை
* நுரையீரல் பிரச்சினைகள்
* நுரையீரல் வீக்கம்
* அதிர்ச்சி
* நிரந்தரத் தசை வாதம்
* சிறுநீர்ப்பாதைத் தொற்று.
கருத்துகள் இல்லை