ஆட்டிசம் என்றால் என்ன?
ஆட்டிசம் என்பது மூளை வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடாகும். மூளையின் முக்கிய செயல்பாடுகளாகிய பேச்சு திறன், சமுதாய தொடர்பு மற்றும் புலன் உணர்வு ஆகியவற்றை பாதிக்கும் நோய்.
ஆட்டிசம் குறைபாடு கண்டறிதல் :
* 6 மாதம் முதல் 3 வயதுக்குள் ஆட்டிசம் குறைபாட்டை கண்டுபிடிக்க முடியும். இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாததால், பலர் 3 வயதுக்குள் கண்டுபிடிக்க தவறிவிடுகின்றனர்.
* 3 வயதுக்குள் கண்டுபிடித்தால் உரிய பயிற்சி அளித்து, ஓரளவு குறைபாட்டை சரி செய்துவிடலாம்.
* ஆட்டிசம் குறைபாடு ஏற்படுகிறது என இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
* பெண் குழந்தைகளை விட, ஆண் குழந்தைகள் தான் இக்குறைபாட்டால் 4 மடங்கு பாதிக்கப்படுகின்றனர். இதற்கான காரணமும் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை. 10 ஆயிரம் குழந்தைகளில், 5 பேருக்கு இக்குறைபாடு ஏற்படுகிறது.
ஆட்டிசம் குறைபாடு இருந்தால் செய்ய வேண்டியது :
குழந்தைகளுக்கு நம் வாழ்வின் அன்றாட பழக்க வழக்கங்களை கற்றுக்கொடுப்பது தான், ஆட்டிசம். குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் முதல் சிகிச்சை. இவர்களுக்கு பயிற்சி தான் சிகிச்சை.
{ இருப்பினும் மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம்.}
ஆட்டிசம் குறைபாட்டிற்கு சிகிச்சை முறைகள் :
* ஆட்டிசம் குறைபாடு ஏற்படுவதற்கு தாய், தந்தையரின் பரம்பரையில் யாரேனும் பாதிக்கப்பட்டிருப்பது.
* மெக்னீசியம், துத்தநாகம் போன்ற கனிம சத்துக்களின் குறைபாடு, சென்ரடின் என்ற ஹார்மோன் குறைபாடு எனக் கூறப்படுகின்றது. ஆட்டிசம் இருப்பது தெரிய வந்தால், அதற்கு உரிய நரம்பியல் மற்றும் மனநல சிகிச்சை முறைகளை மேற்கொண்டு, ஆட்டிசம் பாதித்தவர்களுக்கு மறு வாழ்வு அளிப்பதில் அக்கறை செலுத்த வேண்டும்.
* பாதிக்கப்பட்டவர்கள் நடந்து கொள்ளும் முறையை முழுமையான பயிற்சிகள் மூலம் மாற்றி அமைத்து அவர்கள் வாழ்க்கையை முழுமையானதாக மாற்றலாம்.
ஆட்டிசம் குறைபாடு சிகிச்சைகள் :
* முதன்மையாக நான்கு வகையான தெரப்பிகள் தேவைப்படுகின்றன.
* நடத்தை சீராக்கல் பயிற்சிகள் - behavioral therapies
* வளர்ச்சிக்கான பயிற்சிகள் - developmental therapies
* கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள் - educational therapies
* பேச்சுப் பயிற்சி - speech therapy
* நம் வாழ்வின் அன்றாட பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுப்பது தான், ஆட்டிசம் குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் முதல் சிகிச்சை.
* இவர்களுக்கு ஆக்குபேஷனல் தெரபி, ஸ்பீச் தெரபி போன்ற பயிற்சிகள் கொடுக்கலாம்.
கருத்துகள் இல்லை