இருமல் சளி வரக் காரணங்கள் :
* பெரும்பலான இருமல் சளி நோய்க்கான காரணம் வைரஸ் கிரமிகளாகும். சில நேரங்களில் பாக்டீரியா கிருமிகளால் சுவாச மண்டல நோய் ஏற்படலாம்.
* குழந்தைக்கு அடிக்கடி தலையில் நீர் ஊற்றுவது காது, மூக்கு போன்ற துவாரங்களில் எண்ணெய் ஊற்றுவது, வாயில் கைவிட்டு சளி எடுப்பது போன்ற தவறான பழக்க வழக்கங்களைத் தவிர்க்க வேண்டும்.
* மூக்கில் சளி அடைத்தால் சுத்தமான துணிக் கொண்டு மூக்கைச்சுத்தம் செய்ய வேண்டும்.
இருமல் சளி வராமல் தடுக்கும் முறைகள் :
* குழந்தைகளுக்கு பிறந்தது முதல் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுப்பது
* போஷக்கான உணவுகளை அளிப்பது
* தடுப்பூசிகளை முழுமையாக போடுவதின் மூலமும் குழந்தைகளுக்கு நிமோனியா வருவதை தடுத்து நிறுத்த உதவ முடியும்.
* குழந்தை இருக்குமிடத்தில் புகைப்பிடிக்ககூடாது. கொசுவர்த்தி போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது.
* இருமல் சளிநோய் உள்ள பெரியவர்கள் சுகாதார முறைகளைக் கடைபிடிக்கவேண்டும்.
* காற்றோட்டம் இல்லாத ஜனநெருக்கடி உள்ள அறைகளில் இருப்பதன் மூலமும் இருமல் சளி நோய் வருவதற்கும் பரவுவதற்கும் வாய்ப்பு உண்டு.
* இருமல் சளி நோய் கொண்டவர்கள் குழந்தைகளுடன் கொஞ்சக்கூடாது.
இருமல் சளி வந்தபின் செய்யவேண்டியவை :
* ஒரு குழந்தைக்கு இருமல் அல்லது சளி இருந்தால், அக்குழந்தையினை கதகதப்பான நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
* குழந்தையை முடிந்த அளவுக்கு, சாப்பிடுவதற்கு உற்சாகப்படுத்த வேண்டும்.
* சுண்டைக்காயை வத்தல் செய்து மைய அரைத்து உருண்டையாக எடுத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும்.
* பாலை சிறிது சிறிதாகக் கொடுத்தால் குழந்தை இருமி வாந்தி எடுக்காது.
* துளசிச்சாறு, தேன், சுக்கு நீர் ஆகியவற்றை அளவோடு குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.
{ இருப்பினும் மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம். }
இருமல் சளி வந்தபின் உணவுமுறைகள் :
* மிளகையும் வெல்லத்தையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இருமல் நீர்க்கோவை ஆகியவை குணமாகும்.
* சீரகத்தையும் கற்கண்டையும் மென்று தின்றால் இருமல் குணமாகும்.
* நான்கு மிளகையும், இரு கிராம்பையும் நெய்யில் வறுத்து பொடி செய்து ஒரு வெற்றிலையில் மடித்து மென்று விழுங்கினால் இருமல் குணமாகும்.
* நான்கு வால் மிளகை சிறிதளவு புழுங்கலரிசியுடன் வாயில் போட்டு மென்று அதன் ரசத்தை பருகினால் இருமல் குணமாகும்.
* தூதுவளை, ஆடாதோடா, சங்கன் இலை, கண்டங்கத்தரி இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கஷயம் செய்து சாப்பிட்டால் இறைப்பு சளிகட்டு நீங்கும்.
* மாதுளம் பழச்சாறு, எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் சளி தொல்லை குணமாகும்.
* காய்ச்சிய பாலில் சிறிதளவு மஞ்சள் தூளைப் போட்டுக் கலக்கி குடித்து வந்தால் நெஞ்சுச்சளி விலகும்.
கருத்துகள் இல்லை