காச நோய் வராமல் தடுக்கும் முறைகள் :
* உடலில் எதிர்ப்பு சக்தியை குறையாமல் வைக்கக்கூடிய சிறந்த உணவுகளை சாப்பிடுவது.
* மது, புகைத்தல் போன்ற பழக்கங்கள் இருந்தால் விடுபடுதல்.
* உடற்பயிற்சியின் மூலம் உடலை எப்போதும் துடிப்போடு வைத்துக்கொள்ளல்.
* காச நோயால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைபடுத்தி வைத்தல்.
* காச நோயாளிகளுடன் பழகும் சூழ்நிலை ஏற்பட்டால் வாய், மூக்கு ஆகியவற்றை தூய துணியால் மூடிக்கொண்டு பணி செய்தல் வேண்டும்.
* முதன்மை அறிகுறிகள் தெரிந்த உடனேயே மருத்துவரை கண்டு, உரிய பரிசோதனைகள் மூலம் உறுதி செய்துகொள்ளல் அல்லது உரிய மருத்துவத்தை எடுத்துக்கொள்ளல் வேண்டும்.
* குளிரூட்டப்பட்ட இடங்களில் காசநோய்கிருமிகள் அதிக நேரம் உயிர் வாழும். எனவே அவ்விடங்களிலும், மக்கள் அதிகமாக உள்ள இடங்களிலும், அதிகமாக நிற்பதைத் தவிர்க்க வேண்டும்.
கருத்துகள் இல்லை