இரத்த சோகை என்றால் என்ன?
* நமது உடம்பில் ஓடும் இரத்தத்தில் உள்ள சிகப்பு அணுக்களில் ஹீமோகுளோபின் எனும் புரதசத்து நமக்கு தேவையான ஆக்ஸிஜனை உடலிலுள்ள அனைத்து பாகங்களுக்கும் கொண்டு செல்லுகிறது.
* இந்த ஹீமோகுளோபின் அளவு குறையும் போது இரத்த சோகை நோய் ஏற்படுகிறது.
{ இவ்வாறு இருப்பின்> மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம். }
இரத்த சோகை வராமல் தடுக்கும் முறைகள் :
* பெண்களுக்கு 100 மி.லி. இரத்தத்தில் 12 கிராமுக்கு குறைவாகவோ, கர்பிணிகளுக்கு 100 மி.லி. இரத்தத்தில் 11 கிராமுக்கு குறைந்தால் இரத்தசோகை ஏற்படும்.
* இதற்கு இளம்பெண்கள் மருத்துவரிடம் இரும்புச்சத்து மாத்திரைகள் பெற்று உட்கொள்ள வேண்டும்.
இரத்த சோகையைக் கண்டறிவது எப்படி ?
* இரத்தத்தில் ஹீமோகுளோபின் (HB%)அளவு எவ்வளவு உள்ளது என்பதை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
இரத்த சோகை வந்தபின் காக்கும் முறைகள் :
* ஆறு மாதங்களுக்கு ஒருமுறை குடல் பூச்சி நீக்கி மருந்து எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.
* இரும்புச்சத்து மாத்திரை சாப்பாட்டுக்குப்பின் உட்கொள்ளுதல் வேண்டும்.
* இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை போதுமான அளவு சேர்த்துக் கொள்ளுதல் அவசியம்.
* சுகாதாரக் கழிப்பறையை உபயோகித்தல்.
* வெளியில் செல்லும் போது காலணிகள் அணிதல்.
* மலம் கழித்தபின், சமைக்கும் முன், குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் முன் சோப்பு போட்டுக் கைகளைக் கழுவுதல்.
இரத்த சோகைக்கான சிகிச்சைகள் :
* இரும்புச்சத்தைக் கொடுக்கக்கூடிய மருந்துகள் மற்றும் சப்ளிமென்டுகள்.
* குழந்தைகளின் இரும்புச் சத்து நிறைந்த ஃபோர்மூலா.
* ஃபோலிக் அசிட் மற்றும் விட்டமின் பி 12 சப்ளிமென்டுகள்.
இரத்த சோகைக்கான உணவு முறைகள் :
* முட்டை
* முருங்கைக்கீரை
* அரைக் கீரை
* புதினா
* கொத்த மல்லி
* கறிவேப்பலை
* அகத்திக் கீரை
* பொன்னாங்கண்ணி கீரை
* திராட்சை
* பேரீட்சை
* உலர்ந்த திராட்சை
* பப்பாளி
* அத்திப் பழம்
* மாம்பழம்
* பலா பழம்
* சப்போட்டா
* ஆப்பிள்
* நெல்லிக்கனி
* பால்
* இறைச்சி
கருத்துகள் இல்லை