நிமோனியா காய்ச்சல் என்றால் என்ன? :
நாம் சுவாசிக்கும்போது, காற்றை உள்ளே இழுக்கிறோம். அதில் உள்ள ஆக்சிஜனை உள்வாங்கி இரத்தத்தில் கலக்கும் பணியை நுரையீரல் செய்கிறது. நம் உடலில் உள்ள உறுப்புக்கள் பயன்படுத்திய, கார்பன் - டை - ஆக்சைடு கலந்த காற்றை, இரத்தத்தில் இருந்து பிரித்து வெளியேற்றும் பணியையும் நுரையீரல் செய்கிறது. இப்படி, காற்றை சுவாசிக்கும்போது காற்றில் கலந்திருக்கும் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை போன்ற நோய் பரப்பும் கிருமிகள், நுரையீரலைத் தாக்கி நோயை ஏற்படுத்துகின்றன. இதுவே நிமோனியா காய்ச்சல் ஆகும்.
நிமோனியா காய்ச்சல் சிகிச்சை :
* நிமோனியோ காய்ச்சலை தணிக்க வெந்நீர் ஒத்தடம் தரலாம். பாட்டிலில் வெந்நீரை ஊற்றி வெதுவெதுப்பான நிலையில் குழந்தையின் நெஞ்சுப்பகுதியில் ஒத்தடம் தரலாம். இதனால் நுரையில் பகுதியில் சளி இருந்தால் அது வெளியேறும். மூச்சுவிடுவதில் உள்ள சிரமம் நீங்கும்.
* இரத்தக் குழாய் வழியாக குளுக்கோஸ் தரப்படும்.
நிமோனியா காய்ச்சல் தடுக்கும் வழிமுறைகள் :
* குழந்தைகள் இருக்கும் வீட்டில் யாரும் சிகரெட் பிடிக்கக்கூடாது.
* சளி மற்றும் இருமல் இருப்பவர்கள், குழந்தைகளைக் கொஞ்சக் கூடாது.
* குழந்தை பிறந்தவுடன் தக்க தடுப்பூசிகளைத் தவறாமல் போட வேண்டும்.
* குழந்தை வயதுக்கேற்ற சரியான எடையுடன் இருக்கிறதா என்பதைப் பரிசோதித்து சரிவிகித உணவு கொடுக்க வேண்டும்.
நிமோனியா காய்ச்சல் உணவு முறைகள் :
* சத்தான பழங்கள், காய்கறிகள், முளைகட்டிய தானியங்கள் போன்றவைகளை உண்ணத்தரவேண்டும்.
* குழந்தைக்கு தவறாமல் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். அதற்குப் பிறகு, இரண்டு வயது வரை தாய்ப்பாலுடன் மற்ற உணவு வகைகளையும் கொடுக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை