உப்புச்சத்து என்றால் என்ன? :
நமது உடலில் இருக்கக் கூடிய உப்பின் அளவை விட அதிகமாக இருப்பதே உப்புச்சத்து ஆகும்.
உப்புச்சத்து குறைய மருத்துவம் :
* கரிசலாங்கண்ணி, வேப்பிலை, கீழாநெல்லி, துளசி ஆகியவற்றை பொடி செய்து ஒரு டீஸ்பூன் வீதம் காலை, மாலை என இருவேளை சாப்பிட்டு வந்தால் உடம்பில் உப்புச்சத்து குறையும்.
* உப்பு குறைக்கப்பட்டாலே, இரத்த அழுத்த அளவு தானாகவே குறைந்து விடும்.
உப்புச்சத்து பின்பற்ற வேண்டியவை :
* பழங்கள், காய்கறிகளை சாப்பிடலாம். உப்பு குறைத்து உணவு சாப்பிட வேண்டும்.
* பாட்டில் பானங்களை கண்டிப்பாக குடித்தல் கூடாது.
* பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு, நீண்ட நாள் பாதுகாப்புக்காக சோடியம் பயன்படுத்தப்படுகிறது. உப்பு அதிகமாக உள்ளதால் அவற்றை தவிர்க்க வேண்டும்.
* ஊறுகாய், உப்பு போட்ட நொறுக்குகளை மறந்து விட வேண்டும். உடலில் அதிக அளவில் உப்பு, வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேறி விட்டால், அதை ஈடு செய்ய உப்புக் கரைசல் தேவை.
* உடலில் உப்பு குறைந்தால் தண்ணீர் வற்றிய நிலைக்கு தள்ளப்படுகிறது. அப்போது வாந்தி, மயக்கம் வரும். அதை தீர்க்க அதிக அளவில் தண்ணீர், எலக்ட்ரால் கரைசல் குடிக்க செய்கின்றனர் டாக்டர்கள்.
* உடலில் அதிக உப்பு சேர்ந்தாலும் தொல்லை தான். அதிக உப்பு உள்ளவர்களுக்கு அடிக்கடி தாகம் எடுக்கும். அடிக்கடி சிறுநீர் போவர். சிறுநீர் மூலம் தான் அதிகப்படியான உப்பு வெளியேற்றப்படுகிறது.
கருத்துகள் இல்லை