பித்தக்கற்கள் என்றால் என்ன?
* பித்தக்கற்கள் என்பது சிறிய கல் போன்ற திண்மக்கட்டிகளாகும்.
பித்தக்கற்கள் உருவாகக் காரணங்கள் :
* உடல் பருமன்
* நார்ச்சத்து குறைந்த உணவு வகைகளை அதிகமாக உண்பது.
* மாவுச்சத்து நிறைந்த உணவு வகைகளை அதிகமாக உண்பது.
* குறுகிய காலத்தில் உடல் எடை திடீரென அதிகமாவது.
* பித்தநீர் அளவுக்கு அதிகமாகச் சுரப்பது.
* பரம்பரைக் கோளாறு.
* கொழுப்புள்ள உணவை அதிகம் உண்பது.
* ஹார்மோன் கோளாறு.
* பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாகச் சுரப்பது.
* பாக்டீரியா கிருமிகளின் தாக்குதல் காரணமாகப் பித்தப்பை அழற்சி ஏற்படுவது.
* பித்தநீர்த் தேக்கம் அடைவது
* பித்தப்பையில் அடைப்பு ஏற்படுவது.
* கருத்தடை மாத்திரைகளை நீண்ட காலம் சாப்பிடுவது.
* அடிக்கடி விரதம் இருப்பது.
* முறையான உடற்பயிற்சி இல்லாதது.
{ இவ்வாறு இருப்பின்> மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம். }
* கருத்தடைமாத்திரைகளைப் பயன்படுத்துதல்.
* 40 - 50 வயதிற்கும் இடைப்பட்ட பெண்கள்.
பித்தப்பை வீக்கம் :
பித்தக்கற்கள் பித்தப்பையின் குழாயை அடைப்பதனால் பித்தப்பையிலே வீக்கம் /அழற்சி ஏற்படும். இது பித்தப்பை அழற்சி எனப்படும்
பித்தக்கற்கள் பரிசோதனைகள் :
* வயிற்றில் X- கதிர் பரிசோதனை 10% பித்தக்கற்கள் பரிசோதனையில் அவதானிக்க முடியும்.
* வயிற்றுப் பகுதியில் செய்யப்படும் ஸ்கேன் பரிசோதனை (Abdominal Ultra sound scan) மிகவும் முக்கியமான பரிசோதனை ஆகும். இதன்மூலம் பித்தப்பபை பற்றிய பல தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை