நுரையீரல் பாதிப்பு என்றால் என்ன?
மனித உடலின் செயல்பாடுகளுக்கு ஒவ்வொரு உறுப்பும் இன்றியமையாததாகும். இதில் உடலுக்கு தேவையானக் காற்றை உள்வாங்கி, வெளிவிட்டு உடலுக்கு உயிர் சக்தியைத் தருகின்ற மிக முக்கியமான செயலை செய்வதுதான் நுரையீரல். தொற்றுநோய், காற்று மாசுபாடு, புகைத்தல், போன்ற செயல்களால் நுரையீரலானது பாதிப்படைகிறது.
நுரையீரல் பாதிப்பு காரணங்கள் :
* காற்று மாசுபாடு அதாவது சிலிகா, ஆஸ்பெட்டாஸ், கந்தகம், போன்றவற்றைப் பயன்படுத்தும் தொழிற்சாலைகளில் பணி புரிபவர்களின் நுரையீரல்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றன.
* சிகரெட், சுருட்டு, இவற்றிலுள்ள நிகோடின் என்ற வேதிப்பொருள் ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவைக் குறைத்து கனிமப் பொருள்களின் அளவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தி, இரத்தக் குழாய்களில் அடைப்பை உண்டாக்குகிறது.
* புகைப் பழக்கத்தால் மூச்சுக்குழல் அலர்ஜி, காற்றறைகளின் சுவர்கள் சிதைந்துபோதல், எம்ஃபசிமா, நுரையீரல் புற்றுநோய் ஆகியவை உண்டாகின்றன. புகைப் பிடிப்பவர்களுக்கு மட்டுமல்ல, பக்கத்தில் இருப்பவர்களுக்கும் (Passive smoking) இதே தீங்குகள் நேரிடும்.
நுரையீரலைத் தாக்கும் சில முக்கிய நோய்கள் :
* மூச்சுக்குழாய் அலர்ஜி (Bronchitis)
* நுரையீரல் அலர்ஜி (Pneumonia) காற்றறைகள் சிதைந்து போதல் (Emphysema)
* மூச்சுக்குழல்கள் சுருங்கிக் கொள்ளுதல்.
{ இந்த அறிகுறிகள் இருப்பின்> மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம். (Asthma). }
நுரையீரலை பாதிப்பு வராமல் தடுக்கும் முறைகள் :
* புகைப் பிடிப்பதை தவிர்ப்பது.
* தூசு நிறைந்த பகுதிகளுக்கு செல்லும் போது மூக்கில் துணியைக் கட்டிக்கொண்டு செல்வது நல்லது.
* பிராணயாமம், நாடி சுத்தி, ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி போன்றவற்றை தினமும் கடைப்பிடிப்பது.
* உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகளை சாப்பிடுவது.
* நுரையீரல் பாதிப்புக்குள்ளான குழந்தைகள் முதல் அனைத்து வயதுடையவர்களும் சர்க்கரை, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்களும் குளிர்காலம் துவங்கும்முன்பே புளூ தடுப்பூசி எடுத்துக் கொண்டால், நிமோனியா என்ற நுரையீரல் நோயில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்.
* மூச்சுப் பயிற்சி மற்றும் யோகாசனப் பயிற்சியானது நுரையீரலை சீரான இயக்கத்தில் வைத்திருக்கும்.
கருத்துகள் இல்லை