நாய்கடி ஏற்படக் காரணங்கள் :
* ரேபீஸ் எனும் கொடிய வைரஸ் கிருமிகள் காரணமாக இந்த நோய் வருகிறது.
* இந்த வைரஸ்கள் தெருநாயின் உமிழ்நீரில் வசிக்கும். வெறிநோயுள்ள தெருநாய்கள் மனிதர்களைக் கடிக்கும்போது, கடிபட்ட நபருக்கு வெறிநோய் வந்துவிடும்.
நாய்கடி தடுப்பூசியின் முக்கியத்துவம்!
* நாய் கடித்துவிட்டால் உடனே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
* கடித்த நாளில் முதல் ஊசியும், அதன் பிறகு 3, 7, 14, 28-ம் நாள்களில் என்று மொத்தம் 5 முறைத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
* இந்தத் தடுப்பூசி இலவசமாக அரசு மருத்துவமனைகளில் கிடைக்கிறது.
நாய்க்குத் தடுப்பூசி :
* வீட்டில் நாய் வளர்ப்போர் நாய்க்குட்டிக்கு இரண்டு மாதம் முடிந்ததும் ஒரு தடுப்பூசி, மூன்று மாதம் முடிந்ததும் ஒரு தடுப்பூசி போட்டுவிட வேண்டும்.
* ஆண்டுக்கு ஒருமுறை இதே தடுப்பூசியைப் போட வேண்டும்.
* வீட்டுநாயைத் தெருநாயோடு பழகவிடக்கூடாது.
நாய்கடித்தால் செய்யவேணடியவை
நாய்கடித்தால் என்ன செய்ய வேண்டும்?
* நாய் கடித்தவுடன் கடிபட்ட இடத்தை உடனே சோப்பு நீரால் பலமுறை நன்கு கழுவ வேண்டும்.
* வேகமாக விழுகிற குழாய்த் தண்ணீரில் காயத்தைக் கழுவுவது மிக முக்கியமானது.
* காயம் ஆழமாக இருந்தால் காயத்தை நன்கு விலக்கிச் சுத்தப்படுத்த வேண்டும்.
* தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரிடம் சென்று, முறையான சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.
நாய்கடித்தால் செய்யக்கூடாதவை
நாய்கடித்தால் செய்யக்கூடாது?
* காயத்துக்கு கட்டுப் போடக்கூடாது.
* சூரிய ஒளியில் இந்த வைரஸ் கிருமிகள் இறந்துவிடும் என்பதால் காயத்தை மூடாமல் வைத்திருக்க வேண்டும்.
* திறந்த காயமாக இருந்தாலும், ஆழமான காயமாக இருந்தாலும் தையல் போட்டு மூடக்கூடாது.
* நாய் கடித்த இடத்தில் சுண்ணாம்பு, சந்தனம், சாம்பல், பச்சிலைச்சாறு போன்றவற்றைத் தடவக்கூடாது. அப்படித் தடவினால் கிருமிகள் உடலை விட்டு வெளியேறாமல் தங்கி விடும்.
நாய்கடி தவிர்க்கவேண்டிய உணவுகள் :
* இறைச்சி
* கத்திரிக்காய்
* பூசணிக்காய்
* புளிப்பு பொருட்கள்
கருத்துகள் இல்லை