* வைரல் இளம் சிவப்புக் கண் நோய் வழக்கமாக இரண்டு கண்களையும் பாதிக்கும். உங்கள் பிள்ளைக்கு வேறு தடிமல் அறிகுறிகளும் இருக்கலாம். உங்கள் பிள்ளை காலையில் எழுந்திருக்கும்போது அவர்களது கண்கள் ஒட்டும் தன்மையுடையதாக இருக்கும். கண்ணிலிருந்து வெளியேறும் நீர் பெரும்பாலும் தெளிவானதாக இருக்கும்.
* பாக்டீரியாவினால் உண்டாகும் இளம் சிவப்புக் கண் நோய் பெரும்பாலும் முதலில் ஒரு கண்ணை மாத்திரம் பாதிக்கும்.
* மஞ்சள் அல்லது பச்சை நிற நீர் வெளியேறுவதை நீங்கள் பார்க்க முடியும். இந்த வெளியேறும் நீர் கண்ணிமைகளில் பொருக்கை ஏற்படுத்தும்.
* சுற்றுச்சூழலிலுள்ள ஏதாவது பொருட்களுக்கு ஒவ்வாமை இருக்கும்போது, இளம் சிவப்புக் கண் நோய் ஏற்படலாம். உங்களுக்கு புல், மர மகரந்த தூள்கள் மற்றும் மிருகங்கள் போன்றவற்றிற்கு ஒவ்வாமை இருக்கலாம். இது இரு கண்களையும் பாதிக்கும். கண்ணிலிருந்து நீர் வெளியேற்றம் சிறிதளவிலிருக்கலாம் அல்லது இல்லாமலுமிருக்கலாம். உங்கள் பிள்ளைக்கு கண்களில் அரிப்பு மற்றும் கண்களிலிருந்து நீர் வெளியேற்றம் இருக்கலாம்.
* தொடு வில்லை (கான்டாக்ட் லென்ஸ்) அணியும் பதின்ம வயதினர் தொடு வில்லைகளை அகற்ற வேண்டும். உடனடியாக ஒரு உடல்நல பராமரிப்பளிப்பவர் அல்லது கண் பராமரிப்பு நிபுணரை அணுகி, கண்களின் சிவப்பு நிறம் தொடுவில்லை அணிவதுடன் சம்பந்தப்பட்டதா என கண்டறியவேண்டும்.
கருத்துகள் இல்லை