மலேரியா என்றால் என்ன? :

                     * மலேரியா காய்ச்சல் பெண் அனாபிளஸ் என்ற கொசுக்களால் ஏற்படுகிறது. இவ்வகை கொசுக்கள் தண்ணீர் தேங்கியிருக்கும் இடத்தில் இனப்பெருக்கமாகும்.

                     * இக்கொசுக்கள், நம்மை இரவு நேரத்தில் கடிக்கும். அப்போது கொசுக்களின் உமிழ்நீர் வழியாக மலேரியா கிருமிகள் நம் உடலுக்குள் புகுந்துவிடும். பின்பு அவை இரத்தத்தில் கலந்து கல்லீரலுக்குச் செல்லும். இக்கிருமிகள் ஒரு வாரம்வரை கல்லீரலில் தங்கி, கோடிக்கணக்கில் பெருகும். பிறகு அங்கிருந்து இரத்தத்துக்கு வந்து இரத்தச் சிவப்பணுக்களை அழிக்கும். அப்போது மலேரியா காய்ச்சல் ஏற்படும்.

மலேரியா காய்ச்சல் பரிசோதனை :

                  * நோயாளியின் விரல் நுனியில் இரத்தம் எடுத்து, அதிலுள்ள அணுக்கள் பரிசோதித்தல்.

                  * சிவப்பு அணுக்களுக்குள் மலேரியா கிருமிகள் இருப்பது காணப்பட்டால், மலேரியா நோய் என்று உறுதி செய்யப்படும்.

                  * காய்ச்சல் இருக்கும்போது நோயாளியின் இரத்தத்தை எடுத்துப் பரிசோதித்தால், இதன் முடிவு மிகச் சரியாக இருக்கும்.

                 * அடுத்து, இரத்த அணுக்களின் வடிவம், அளவு, எண்ணிக்கை ஆகியவற்றைப் பரிசோதித்து நோயாளிக்கு இரத்தசோகை உள்ளதா என அறியப்படும்.

                 * பொதுவாக இந்த நோயாளிக்கு ";நார்மோசைடிக் இரத்தசோகை";காணப்படும்.

மலேரியா காய்ச்சலால் ஏற்படும் அதிகமான பிரச்சினைகளும் விளைவுகளும் :

                      * மிகவும் பலவீனம் புத்திசுவாதினமின்மை, சுறுசுறுப்பின்மை மற்றும் சுயநினைவு இழத்தல்.

                     * சுவாசிப்பதில் கடினத்தன்மை (மூச்சுவிடுவதில் கடினம்)

                    * தீவிர இரத்த சோகை

                    * தாகத்திற்கு தண்ணீர் கூட அருந்த இயலாத நிலையும் ,வாந்தி வருவது போன்ற உணர்வும் இருக்கும்.

மலேரியா காய்ச்சல் சிகிச்சை :

                     மலேரியாவால் பாதிக்கப்பட்டுள்ள அல்லது மலேரியவிலிருந்து சுகம் பெற்றுக்கொண்டிருக்கிற ஒரு குழந்தைக்கு, அதிகளவு திரவ மற்றும் திட உணவு தேவைப்படுகிறது.

மலேரியா காய்ச்சல் தடுக்கும் வழிமுறைகள் :

                       * மாலை, இரவு நேரங்களில் அனாபிளஸ் பெண் கொசுக்களின் கடிக்கு உட்படாத முயற்சிகளும், செயல்பாடுகளும் மலேரியா வருவதைத் தடுக்க சிறந்த வழிகளாகும்.

                       * பெர்மித்ரின் அல்லது அதுபோன்ற பூச்சிகொல்லி மருந்தை உங்கள் வீட்டின் பெரிய அறை அல்லது படுக்கும் அறையில் தெளிக்கலாம்.

                       * வீட்டின் ஜன்னல்கள், கதவுகளில் கொசு உட்புகுவதைத் தடுக்க பின்னல் வலைகளை அமைக்க வேண்டும்.

                       * பூச்சிகளை கொல்லும் தன்மை கொண்ட வலைகளை படுக்கையைச்சுற்றி அமைக்க வேண்டும்.

                       * கொசு உற்பத்தியாகக்கூடிய சூழல் உள்ள நீர்நிலைகளை தூய்மையாக வைத்துக்கொள்வது.

                       * கழிவு நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மலேரியா காய்ச்சல் பரிசோதனை | மலேரியா காய்ச்சல் சிகிச்சை | மலேரியா காய்ச்சல் தடுக்கும் வழிமுறைகள்

கருத்துகள் இல்லை