அலர்ஜி என்றால் என்ன?

                வெளியில் இருந்து உடலுக்கு ஒவ்வாத பொருட்கள் நுழையும் போது, உடல் காட்டும் நோய் எதிர்ப்பு தன்மையின் காரணமாக உருவாவதுதான் அலர்ஜி.

அலர்ஜி ஏற்படக் காரணங்கள் :

                * தட்பவெப்பம், உணவு, சுற்றுச்சூழல் மாசு உள்பட பல காரணங்களால் அலர்ஜி உண்டாகும்.

                * மலரின் மகரந்தம், செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய், பூனை ஆகியவற்றின் தோலில் உள்ள ஒரு பொருள், முடி ஆகியவற்றில் இருந்தும் அலர்ஜி ஏற்படும்.

               * வேதிப்பொருட்கள் உடலில் உற்பத்தியாவதால் கண்ணில் நமைச்சல், கண்கள் வீங்கி சிவத்தல், மூக்கடைப்பு, மூக்கில் வடிதல், தொடர் தும்மல், இருமல், தோலில் சிவந்த தடிப்பு போன்ற அலர்ஜிக்கான அறிகுறிகள் இருப்பின் மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம்..

அலர்ஜி வராமல் தடுப்பு முறைகள் :

                   * அலர்ஜி உடையவர்களுக்காக தனியாகத் தயாரிக்கப்படும் அலர்ஜியற்ற உணவு, உணவுப் பொருட்களை உண்ணலாம்.

                   * பாலிதீன் பேப்பர் மற்றும் பிராணிகளின் ரோமம், தோலால் செய்யப்பட்ட பைகளில் உணவை பொட்டலம் கட்டிப் பயன்படுத்தக்கூடாது. அது ரசாயன மாற்றம் அடைந்து அலர்ஜியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

                  * புதிய துணியாக இருந்தாலும் துவைத்த பின் பயன்படுத்தவும். உள்ளாடைகளை நீண்ட காலத்துக்கு பயன்படுத்துவதை தவிர்த்தல் வேண்டும்.

                  * சுத்தமாக இருத்தல் மிகவும் அவசியம்.

அலர்ஜி வந்தபின் காக்கும் முறைகள் :

                   * உணவுப்பொருட்களை உபயோகிப்பதற்கு முன்பு அவற்றின் லேபிளில் ஒத்துக்கொள்ளாத பொருள் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதைப் படித்து தெரிந்துக் கொள்ளவும்.

                   * சமைக்கும் போது அலர்ஜி உள்ள பொருட்களை தவிர்க்கலாம். அவற்றிற்கு நிகரான சத்து உள்ளவற்றை உணவில் சேர்க்கலாம்.

                   * ஏசி பயன்படுத்துபவர்கள் வடிகட்டும் வலையை அடிக்கடி மாற்றவும்.

                  * தூசு, மகரந்த அலர்ஜி உள்ளவர்கள் வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிந்து சென்றால் அலர்ஜியை தவிர்க்கலாம்.

                  * பாய், தலையணை, மெத்தை போன்றவற்றை தூசு இல்லாமல் பார்த்து கொள்வது நல்லது.

                  * சமையலறை மற்றும் குளியலறையில் காற்றை வெளியேற்றும் கருவி பொருத்துவது அவசியம்.

                  * ரோமம் நிறைந்த நாய், பூனை மற்றும் கிளி, புறா போன்ற பறவைகள் ஆகியவற்றை செல்ல பிராணிகளாக. வளர்ப்பதை தவிர்க்கவும். அப்படியே வளர்த்தாலும் அவற்றுக்கு வாரம் ஒரு முறை சோப்பு போட்டு குளிப்பாட்டவும். வீட்டுக்கு வெளியில் அவற்றை பராமரிக்கலாம். கண்டிப்பாக படுக்கை அறையில் அனுமதிக்க கூடாது.

அலர்ஜி தவிர்க்கவேண்டிய உணவுகள் :

                * அலர்ஜி பிரச்னை இருக்கும் நேரத்தில் உப்பில் ஊற வைத்த பொருட்களான ஊறுகாய், வற்றல், கருவாடு.

                 * கரம் மசாலா சேர்க்கப்படும் பிரியாணி உள்ளிட்ட உணவு வகைகள்.

                 * குளிர்சாதன பெட்டியில் அதிக நாட்கள் வைத்திருக்கும் பால், தயிர், மட்டன், சிக்கன் ஆகியவற்றை சாப்பிடக் கூடாது.

                 * எண்ணெயில் பொரித்து எடுக்கப்படும் பஜ்ஜி, போண்டா, பூரி ஆகியவற்றையும் தவிர்ப்பது நல்லது.

அலர்ஜி உண்ண வேண்டிய மருத்துவ உணவுகள் :

                * சீரகத்தை வறுத்து பொடியாக்கி தினமும் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி குடித்து வருவதன் மூலம் அலர்ஜி ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

                * புதினாவை வாரத்தில் 3 முறை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

               * மோரில் உப்பு கலந்து வெள்ளரிக்காயை சிறிய துண்டுகளாக வெட்டிப்போட்டு சாப்பிடலாம்

               * பசலைக்கீரை சூப் குடிக்கலாம்.

அலர்ஜி வகைகள் :

அலர்ஜி இரண்டு வகைப்படும். அவை

                         * எண்டோஜீனஸ் அலர்ஜி

                         * எக்ஸோஜீனஸ் அலர்ஜி

எண்டோஜீனஸ் அலர்ஜி (Endogenous Allergy):

                 நம் உடலுக்கு உள்ளே ஏற்படும் சில மாற்றங்களால் வரக்கூடிய அலர்ஜி.

எக்ஸோஜீனஸ் அலர்ஜி (Exogenous Allergy):

                வெளியில் உள்ள தூசு, வேதிபொருட்கள், உணவுப்பொருட்கள் போன்றவற்றை நம் உடல் ஒப்புக் கொள்ளாததால் ஏற்படும் அலர்ஜி.

          * சுவாசத்தின் வழியாக அலர்ஜி

          * தொடும் பொருட்களால் அலர்ஜி

          * உணவுப் பொருள்களால் அலர்ஜி

          * ஒளியால் அலர்ஜி

                             என்று அலர்ஜியை பிரிக்கலாம்.

அலர்ஜி ஏற்படக் காரணங்கள் | அலர்ஜி வராமல் தடுப்பு முறைகள் | அலர்ஜி வந்தபின் காக்கும் முறைகள் | அலர்ஜி தவிர்க்கவேண்டிய உணவுகள் | அலர்ஜி உண்ண வேண்டிய மருத்துவ உணவுகள்

கருத்துகள் இல்லை