மகாபாரதம் படிக்க படிக்க படித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்கிற ஆர்வத்தைத் தூண்டக்கூடிய ஒரு இதிகாசம் ஆகும்.

                    மகாபாரதத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பகவத்கீதையைப் போதித்து வாழ்க்கையின் யதார்த்த நிலையை சுட்டிக்காட்டுகிறார். மேலும் மகாபாரதத்தில் உள்ள கதாபாத்திரங்கள் ஒவ்வொருவருக்கும் உள்ள நல்ல குணங்கள் எது? மற்றும் தீய குணங்கள் எது? என்பதை கதாப்பாத்திரங்கள் மூலம் விளக்கப்பட்டு உள்ளது.

                     தீயவர்களின் சு+ழ்ச்சியில் சிக்கி நாட்டை இழந்தாலும், பின் முயன்று நாட்டை மீட்டெடுப்பது பற்றியும் கூறப்பட்டுள்ளது. தனக்கு உண்டான உரிமையைப் பெற எவ்வாறெல்லாம் பாண்டவர்கள் போராடுகிறார்கள் என்பது பற்றியும் தெரிந்துக் கொள்ள முடியும்.

                     துன்பம் வரும் சமயங்களில் கிருஷ்ணா என்று அழைத்தால் நம் துன்பத்தைப் போக்க பகவான் கிருஷ்ணர் ஓடி வருவார் என்று பெரியவர்கள் சொல்லிக் கேட்டிருப்போம். அதற்கு உதாரணமாக மகாபாரதத்தில் திரௌபதி பகவான் கிருஷ்ணர் மேல் கொண்ட பக்தியினால், திரௌபதி கோவிந்தா என அழைத்தவுடன் கிருஷ்ணர் அவள் முன் தோன்றி அளித்த காட்சி மனதை நெகிழ வைக்கும். பிறந்த குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்பி படிக்கும் இதிகாசம் என்றால் அது மகாபாரதம் தான் என்றால் மிகையாகாது.

மகாபாரதத்தில் பாண்டவர்கள் :

தருமர் :

                   தருமர், பாண்டுவிற்கும், குந்திக்கும் மகனாகப் பிறந்தவர். இவர் பஞ்ச பாண்டவர்களில் மூத்தவர் ஆவார். இவர் துர்வாச முனிவரின் வரத்தின் காரணமாக குந்திக்கு எமதர்மன் மூலமாகப் பிறந்தவர். தருமர், குருச்சேத்திரப் போரில் பாண்டவர்களின் தலைவராக இருந்தவர். இவர் அஸ்தினாபுரத்தின் அரசர். இவர் சிறந்த நிர்வாகத் திறமை கொண்டவர்.

பீமன் :

                     பீமன், பாண்டுவிற்கும், குந்திக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தவர். இவர், வாயு பகவானுக்கும், குந்திக்கும் பிறந்தவர். பீமன் மிகுந்த வலிமையுடையவர். மேற்கு இந்தியாவில் பாயும் பீமா ஆறானது இவரது பெயராலேயே அழைக்கப்படுகிறது.

அர்ஜூனன் :

                     அர்ஜூனன், பாண்டுவிற்கும், குந்திக்கும் மூன்றாவது மகனாகப் பிறந்தவர். கிருஷ்ணரின் நண்பன். அர்ஜூனன், வில் வித்தையில் சிறந்தவர். இவர், பாண்டவர் மற்றும் கௌரவர்களுக்கு குருவான துரோணரின் முதன்மையான சீடன் ஆவார்.

நகுலன் :

                      நகுலன், பாண்டுவிற்கும், பாண்டுவின் இரண்டாவது மனைவியான மாத்ரிக்கும் மகனாகப் பிறந்தவர். இவர் அஸ்வினி தேவர்களின் மூலமாகப் பிறந்தவர். நகுலன் மிகவும் அழகான தோற்றம் உடையவர். வாள் வீச்சில் சிறந்தவர். நகுலனும், சகாதேவனும் இரட்டையர்களாகப் பிறந்தவர்கள்.

சகாதேவன் :

                     சகாதேவன், பாண்டுவிற்கும், பாண்டுவின் இரண்டாவது மனைவியான மாத்ரிக்கும் மகனாகப் பிறந்தவர். பாண்டவர் ஐவரில் சகாதேவனே இளையவர் ஆவார். இவர் மிகுந்த புத்திக்கூர்மை உடையவர். நடக்கவிருக்கும் செயல்களை முன் கூட்டியே அறியும் ஞானம் படைத்தவர். சகாதேவன், வாள் வீச்சில் நகுலனைப் போலச் சிறந்தவர். இவர் அஸ்வினி தேவர்களின் மூலமாக பிறந்தவர். இவரும் நகுலனும் இரட்டையர்கள் ஆவர்.

மகாபாரதத்தில் கௌரவர்கள் :

                   மகாபாரதத்தில் கௌரவர்களின் பிறப்பு என்பது திருதராஷ்டிரனுக்கும், காந்தார நாட்டு இளவரசியான காந்தாரிக்கும் பிறந்த நு}று மகன்கள் கௌரவர்கள் எனப்படுவர்.

                     மகாபாரதத்தில் கௌரவர்களில் முதல் மகனான துரியோதனன், பேராசையும், பிடிவாதமும் உடையவனாக வளர்ந்தான். அவனை அடுத்து பிறந்த துச்சாதனன் தீமையில் துரியோதனனை விட கொடுமையானவன். கௌரவர்கள் அனைவரும் செல்வ செழிப்போடு பிடிவாத குணம் கொண்டவர்களாக வளர்ந்தனர்.

பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் [ மகாபாரதம் பாகம் - 4 ]

கருத்துகள் இல்லை