* இந்திய பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்று மகாபாரதம். மகாபாரதம், உலகின் மிக நீண்ட இதிகாசங்களில் ஒன்றாகும்.
* நவீன இந்து சமயத்தின் முக்கிய நு}ல்களில் ஒன்றான பகவத் கீதையும் இந்த இதிகாசத்தின் ஒரு பகுதியே. பாண்டு, திருதராட்டிரன் என்னும் இரு சகோதரர்களின் பிள்ளைகளிடையே இடம் பெற்ற பெரிய போரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதே இந்தக் காப்பியமாகும்.
* மனித வாழ்க்கையில் ஒருவன் எவ்வாறு அறநெறி மற்றும் ஒழுக்கத்தோடு வாழும் முறையை பற்றி கூறுவதே இக்கதையின் நோக்கமாகும். மேலும் மனிதன் எந்த நேரத்திலும் தருமத்தின் வழித் தவறாது நடக்க வேண்டும் என்பதை பற்றியும் கூறுகிறது. அதனால் இக்காவியம் பாரத மகா காவியம் என்றும் கூறப்படுகிறது.
* வெறும் கதையை மட்டும் வாசிப்பது என்றால் ஆறுமாத காலத்திற்குள் உங்களால் மகாபாரதத்தை வாசித்துவிட முடியும். ஆனால் அதிலுள்ள கவித்துவ அழகு, அறச்சிந்தனைகள், பண்பாட்டு சிந்தனைகள் ஆகியவற்றை ஆழ்ந்து படிப்பதற்கு நம்முடைய வாழ்நாள் போதாது.
* ஆசான்களை அவமதித்தல், பெண்மையை சு+றையாடுதல், வினை விதைப்பவனின் விதி பயன், தீய இடத்தில் இருந்தும் நற்குணம் கொண்டவனின் கதி என வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் மனிதன் என்ன செயல் செய்தால், அவனுக்கு என்ன பலன் விளைவிக்கப்படும் என வாழ்வியலில் புரிதல் ஏற்பட, நம் மண்ணில் நிகழ்ந்தேறிய மாபெரும் இதிகாசம்.
* மகாபாரதம், பல தரும நெறிகளை நமக்கு உணர்த்துகின்றது. தருமத்தைக் கடைப்பிடித்து வாழ வேண்டும். பல சந்தர்ப்பங்களில் தரும சங்கடங்கள் தோன்றி நம்மை நெறிதவற வைக்கப் பார்க்கும். அத்தகைய தருமசங்கடங்கள் விளையும்போது தீங்கைச் சிறிதும் எண்ணாது தர்மத்தைக் கடைப்பிடித்துப் பண்பால் உயர்ந்து விளங்க வேன்டும் என்பதை மகாபாரதம் பல இடங்களிலும் எடுத்துரைத்து நமக்கு வழிகாட்டுகின்றது.
* குருச்சேத்திரப் போர் மகாபாரதக் காவியத்தில் ஒரு முக்கியமான நிகழ்வாகும். இப்போர் அத்தினாபுரம் அரியணைக்காக பங்காளிகளான கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே குருச்சேத்திரம் என்ற இடத்தில் நடைபெற்றது. இப்போரானது 18 நாட்கள் நடைபெற்றது.
கருத்துகள் இல்லை