* விப்ரியோ காலரா, எஸ்செரிச்சியா கோலி, சிகெல்லா, சால்மோனெல்லா, ரோட்டா வைரஸ், ஆஸ்டியோ வைரஸ், அடினோ வைரஸ், நார்வா வைரஸ், எண்டிரோ வைரஸ், அமீபா, ஜியார்டியா, குடல் புழுக்கள் ஆகியவை வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் முக்கியக் கிருமிகள் ஆகும்.

                * இந்த நோய், பிறந்த குழந்தைகள் முதல் முதியோர்வரை அனைவரையும் பாதிக்கும். எனினும், ஆறு மாதத்திலிருந்து இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளே அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர்.

                * அசுத்தமான இடங்களிலும் மாசு நிறைந்த சூழலிலும் வளரும் குழந்தைகளையும், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ள குழந்தைகளையும் இது எளிதாகத் தாக்கிவிடும்.

                * குழந்தைகளுக்குப் பாட்டிலில் பால் கொடுக்கும்போது, அந்தப் பாட்டிலைச் சரியாகக் கழுவாமல் இருப்பதால் அதிலிருக்கும் கிருமி வயிற்றுப்போக்கு ஏற்படுத்தும்.

                * பிளாஸ்டிக் டப்பாக்களில் பால் தருவது, மலம் கழித்துவிட்டுக் கையைச் சுத்தமாகக் கழுவாமல் குழந்தைகளைத் தூக்குவது போன்றவற்றாலும் இது ஏற்படும். சில குழந்தைகள் எந்த நேரமும் வாயில் ரப்பரை வைத்துக்கொள்ளும். அவை சுத்தம் இல்லாத ரப்பராக இருப்பின் இதன்மூலமும் கிருமிகள் பரவி வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது.

                * பெரியவர்களோடு ஒப்பிடும்போது, குழந்தைகளுக்கு வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அளவு கொஞ்சம் குறைவு. பெரியவர்களின் வயிற்றுக்கு வந்துசேரும் பெரும்பாலான கிருமிகளை அமிலமே அழித்துவிடும். ஆனால், குழந்தைகளுக்கு இவ்வாறு கிருமிகள் அழிக்கப்படுவது குறைவு.
வயிற்றுப்போக்கால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதற்க்கு, இதுவும் ஒரு முக்கியக் காரணம் ஆகும்.

வயிற்றுப்போக்குக்கு காரணமான கிருமிகள்

கருத்துகள் இல்லை