இன்றைய காலத்தில் ஆரோக்கியமான உணவுகளை பலரும் முன்வந்து வாங்க விரும்புகின்றனர். இந்த ஆரோக்கிய உணவுகளில் ஒன்றாக உள்ள பாசிப்பருப்பு நெய் உருண்டை தற்போது பல இடங்களில் கிடைப்பது இல்லை. எனவே, புரதச் சத்து நிறைந்த இந்த உருண்டைகளை நாம் தயார் செய்து விற்பதன் மூலம் நல்ல இலாபம் அடையலாம்.

தேவையான பொருட்கள் :

                          * பாசிப் பருப்பு

                          * கருப்பட்டி

                          * ஏலக்காய் பொடி

                          * முந்திரி

                          * நெய்

செய்முறை :

                 * முதலில் பாசிப்பருப்பை இரும்பு சட்டியில் போட்டு மிதமான தீயில் லேசாக மணம் வரும் வரை வறுக்கவும்.

                * பிறகு பாசிப்பருப்பு ஆறியதும் அதனை மிக்ஸியில் இட்டு நைசாக அரைத்து சலித்து எடுத்துக் கொள்ளவும்.

                * அதேபோல் கருப்பட்டியையும் சிறிது சிறிதாக உடைத்து உரலில் நுனிக்கி கொள்ளவும்.

                * இப்போது அரைத்து வைத்துள்ள பாசிப்பருப்பு, கருப்பட்டி மற்றும் ஏலக்காய் பொடி ஆகியவற்றை ஒரு பெரிய பத்திரத்தில் போட்டு கலக்கவும்.

                * முந்திரி பருப்பை சிறிது நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும்.

                * பிறகு, நெய்யை லேசாக சூடாக்கி அதனை அந்த மாவில் சிறிது சிறிதாக சேர்த்து லட்டு வடிவில் உருண்டை பிடிக்கவும். அந்த லட்டுவின் நடுவில் ஒரு முந்திரியை வைத்து லட்டு பிடிக்கலாம். இப்போது பாசிப்பருப்பு உருண்டை தயார்.

விற்பனை முறை :

                  தயார் செய்த பாசிப்பருப்பு உருண்டைகளை சிறிய அளவிலான பாக்குமட்டை கப்பில் வரிசையாக அடுக்கி பேக்கரிக்கு விற்பனைக்கு அனுப்பலாம். மேலும், அருகிலுள்ள கடைகளுக்கும் விற்பனை செய்து இலாபம் அடையலாம்.

பாசிப்பருப்பு நெய் உருண்டை செய்முறை

கருத்துகள் இல்லை