கால் ஆணி என்றால் என்ன?
பாதத்தில் சிறு கொப்புளங்கள் போல உண்டாவதைத்தான் கால் ஆணி என்று கூறுகிறார்கள். பாதங்களைத் தாக்குவதில் பித்தவெடிப்பிற்கு அடுத்தபடியாக இருப்பது கால் ஆணி. இது பாதத்தைத் தரையில் வைக்க முடியாத அளவிற்கு பிரச்சனையை ஏற்படுத்தும்.கால் ஆணி ஏற்படக் காரணங்கள் :
* கரடு முரடான பாதையில் நடப்பதால் ஏற்படும். பிறவியிலேயே பாதத்தில் குறைபாடுகள் இருக்கும் போது காலுறை இன்றி காலணிகளை போடும் போது அழுத்தம் ஏற்படும்.* அதிக நேரம் தண்ணீரில் பாதங்கள் நனையும் போதும், காலணி அணிந்திருக்கும் போது வியர்வை அதிகம் இருந்தாலும் நுண்ணுயிர் தொற்று ஏற்பட்டு சலம் ஏற்படும்.
* முறையற்ற விதத்தில் நடப்பதால் ஏற்படும். சரியான அளவில் இல்லாத, ஒத்துக் கொள்ளாத காலணி அணிவதால் ஏற்படும்.
* அலர்ஜி காரணமாகவும், அசுத்தமான இடங்களில் உள்ள கிருமிகளாலும், சர்க்கரை நோய் போன்ற காலின் உணர்வு நரம்புகளைப் பாதிப்படைய செய்யும் நோய்களாலும் ஏற்படும்.
* உடல் எடை அதிகரிப்பதாலும் ஏற்படும். கால் ஆணி உடையவர்களின் செருப்புகளைப் பயன்படுத்தினால் அதைப் பயன்படுத்துபவர்களுக்கும் கால் ஆணி வர வாய்ப்புள்ளது.
{ இவ்வாறு இருப்பின்> மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம்.}
கருத்துகள் இல்லை