தேயிலை மர எண்ணெய் :

                  இரவு தூங்குவதற்கு முன் தேயிலை மர எண்ணெயில் பஞ்சை நனைத்து நகங்களை சுத்தம் செய்யுங்கள். தினமும் செய்து வர, இறந்த செல்கள் அகன்று ரத்த ஓட்டம் அதிகரிக்கும். நகங்கள் புதுபிக்கப்படும்.

மஞ்சள் :

                       தினமும் குளிப்பதற்கு முன், மஞ்சள் பொடியை ஆலிவ் எண்ணெயில் கலந்து, நகங்களில் தடவி வட்ட வடிவமாக மசாஜ் செய்யுங்கள். ஐந்து நிமிடங்கள் கழித்து குளிக்கச் செல்லலாம். இது நல்ல பலனைத் தரும். நகங்களில் ஏற்படும் தொற்றினை இது எதிர்க்கும்.

எலுமிச்சை சாறு :

                    எலுமிச்சை சாறினை பஞ்சினால் நனைத்து அதனை நகங்களில் பூசி வந்தால், பூஞ்சை தொற்று மற்றும் அழுக்குகள் நீங்கும்.

வேப்பிலை :

                      வேப்பிலை மிகவும் சக்தி வாய்ந்த மூலிகை. ஒரு கைப்பிடி வேப்பிலையை எடுத்து, ஒரு கப் அளவுள்ள நீரில் போட்டு கொதிக்க வையுங்கள். நன்றாக கொதி வந்ததும், வடிகட்டி, அந்த நீரில் சிறிது பூண்டு, எண்ணெய் மற்றும் தேயிலை மர எண்ணெயை ஊற்றி நன்றாக கலக்கி பின் அதை நகங்களில் தடவி வந்தால், சொத்தை மறைந்து, நகங்கள் பலம் பெறும்.

சாமந்தி :

                  சாமந்தி பூக்கள் மருத்துவ குணங்கள் பெற்றுள்ளவை. சருமத்தில் ஏற்படும் தொற்றுக்களை எதிர்க்கும். சாமந்தி பூக்களை தனித் தனி இதழ்களாக பிரித்து, சுடு நீரில் போட்டு மூடி வையுங்கள். 20 நிமிடங்கள் கழித்து அந்த நீரில் கால்களை அமிழ்த்துங்கள். இவை நகங்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கின்றன.

அதிமதுரம் :

                    அதி மதுரத்தை நீரில் போட்டு நன்றாக கொதிக்க விடுங்கள். 15 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும். பின்னர் நீர் வெதுவெதுப்பானவுடன் அந்த நீரில் பஞ்சை நனைத்து, மெதுவாய் நகங்கள் மீது தடவவும். இது நகத்தில் தங்கும் கிருமிகளை அழித்து, நகங்களை பாதுகாக்கும்.

நகங்கள் பராமரிப்பு

கருத்துகள் இல்லை