காய்ச்சல் என்றால் என்ன?
காய்ச்சல் என்பது ஒரு வியாதியல்ல. அது ஒரு அறிகுறி. பாக்டீரியா அல்லது வைரஸ் கிருமி நம் உடலைத் தாக்கும் போது, இயற்கையிலேயே நம் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி அந்தக் கிருமிகளை அழித்துவிடும். அந்த அழிவுப் போராட்டத்தின் ஒரு விளைவுதான் காய்ச்சல்.சாதாரணமாக 3 நாட்கள் வரை காய்ச்சல் இருக்கும். அதற்கு மேலும் நீடித்தால்தான் மருத்துவரைப் பார்க்க வேண்டும். குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் காய்ச்சல் வந்தால் உடனடியாக பார்க்க வேண்டும்.
காய்ச்சலுக்கான காரணங்கள் :
* வைரஸ், பாக்டீரியா, பூஞ்சைத் தொற்றுகளின் காரணமாகவோ, கொசு, ஈ போன்றவற்றினால் நம் உடலில் உருவாகும் கிருமிகளின் பாதிப்பினாலோ காய்ச்சல் ஏற்படும்.* நம் உடலிலுள்ள சில மென்மையான கொலாஜன் திசுக்கள், உடலில் சில நச்சுப் பொருட்களால் அழிக்கப்படும் போதும் காய்ச்சல் வரலாம்.
* ஹெச்.ஐ.வி பாதித்தோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் அவர்களுக்கு அடிக்கடி காய்ச்சல் வரலாம்.
* பெண்களுக்கு சிறுநீரகத் தொற்றின் காரணமாக காய்ச்சல் வரும்.
* காசநோய் இருந்தாலும் காய்ச்சல் வரும். பொதுவாக காசநோய் என்பது இருமல் தான்.
கருத்துகள் இல்லை