* நோயாளியின் மலத்தைப் பரிசோதித்தால் நோய்க் கிருமியின் வகை தெரியும். அதற்கேற்பச் சிகிச்சை தரப்படும். வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு முதலில் நீரிழப்பைச் சரி செய்ய வேண்டும். இதற்கு அதிக அளவில் சுத்தமான நீரை நோயாளி குடிக்க வேண்டும். அல்லது உப்பு, சர்க்கரைக் கரைசலைப் குடிக்க வேண்டும்.

                * இக்கரைசலை வீட்டிலேயே தயாரித்துக்கொள்ள முடியும். ஐந்து நிமிடங்களுக்குக் கொதிக்க வைத்து, ஆற வைத்த ஒரு லிட்டர் தண்ணீரில் 20 கிராம் சர்க்கரை, 5 கிராம் உப்பு கலந்து, ஒரு மணி நேரத்துக்கு 500 மி.லி. அளவில் குடித்து வந்தால் எளிதில் குணமாகும்.

               * இவை பலன் தராத நிலையில் நோயாளியை மருத்துவமனையில் சேர்த்து, குளுகோஸ் மற்றும் ‘சலைன்’ செலுத்த வேண்டும். அத்துடன் தகுந்த ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் மற்றும் ஓரணுயிரி எதிர் மருந்துகள் செலுத்தப்பட வேண்டும்.

                * ரோட்டா வைரஸ் போன்ற வைரஸ் காரணமாக ஏற்படும் வயிற்றுப்போக்குக்குத் தனிப்பட்ட மருந்து எதுவுமில்லை.

தாய்ப்பால் முக்கியம் :

                   * சிறு குழந்தைக்கு வயிற்றுப்போக்கு இருந்தால், தாய்ப்பால் தருவதை நிறுத்த வேண்டாம். தேவைப்பட்டால் மருத்துவர் யோசனைப்படி தாய்ப்பால் தருகிற இடைவெளியை அதிகப்படுத்திக்கொள்ளலாம்.

                  * பாட்டில் பாலைக் கண்டிப்பாக நிறுத்திவிட வேண்டும். மருத்துவர் யோசனைப்படி உப்புச் சர்க்கரைக் கரைசலை 10 நிமிடத்துக்கு ஒருமுறை ஒரு தேக்கரண்டி அளவுக்குக் குழந்தையின் நாக்கின் அடியில் விட்டு வந்தால் குணமாகும் வாய்ப்பு உள்ளது. குழந்தைக்கு 8 மணி நேரத்துக்குள் வயிற்றுப்போக்கு நிற்காவிட்டால் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை தர வேண்டும்.

வயிற்றுப்போக்கு குணமாக வழிகள் :

                    * ஒரு மாதுளை பழத்தின் சுளைகளை நன்றாக வேக வைத்து அதனுடன் இரண்டு தேக்கரண்டி தேன் சேர்த்து சாப்பிடவும்.

                   * வயிற்றுப்போக்கு ஏற்படும்பொழுது சிறிதளவு கசகசாவை எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று கொஞ்சம் தண்ணீர் குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு குறையும்.

                   * கசகசா தேகத்திற்கு குளிர்ச்சி தரும் மருத்துவ குணம் கொண்டது. இதை அதிகம் சாப்பிட்டால் மயக்கம் வரும்.

                   * கடுக்காயைக் கொட்டை நீக்கித் தோலைச் சூரணம் செய்து கொள்ள வேண்டும். இதனில் 1/2 கிராம் முதல் 1 கிராம் ஒரு நாளைக்கு இருவேளை சாப்பிட்டுவந்தால் வயிற்றுப்போக்கு குணமாகும்.

                   * மா மரத்தின் துளிர் இலைகளைப் பொடியாக்கி, தேனில் குழைத்து உண்டுவந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.

                   * எலுமிச்சைப்பழ சாற்றில் சீரகத்தை ஊற வைத்து காயவைத்து சுவைத்து மென்று சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு குணமாகும்.

                   * பப்பாளிபழம் சாபிட்டால் தொடர் வயிற்றுபோக்கு குறையும்.

                   * தேனுடன் இஞ்சியை வதக்கி, நீர் விட்டுகொதிக்க வைத்து, அந்தநீரை காலை, மாலை என்று இருவேளை குடித்துவர வயிற்றுப்போக்கு தீரும்.

                   * கறிவேப்பிலையுடன் ஒரு தேக்கரண்டியளவு சீரகத்தையும் சேர்த்து அம்மியில் நைசாக அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப்போக்கு நிற்கும்.

                   * சோற்றுக்கற்றாழையின் இளமடலை தோல் சீவி சுத்தம் செய்து, அதனுடன் சீரகம், கற்கண்டு, சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு குணமாகும்.

                   * 100 மில்லி பாலுடன் இரண்டுமாதுளம் பிஞ்சை அரைத்து, பாலுடன் கலந்து குடித்தால் வயிற்றுப்போக்கு குணமாகும்.

                   * இளம் பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு சரியாகும்.

                   * வெற்றிலையுடன் சிறிது ஓமத்தைச் சேர்த்து அரைத்து அதனுடன் ஒரு கரண்டி தேன் கலந்து சாப்பிட வயிற்றுப்போக்கு உடனே குணமாகும்.
பாலுடன் மாங்கொட்டையின் பருப்பை பொடி செய்து கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு குணமாகும்.
சீரகத்தை எலுமிச்சை பழசாற்றில் ஊற வைத்து காயவைத்து, மென்று சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு குணமாகும்.

வயிற்றுப்போக்குக்கானச் சிகிச்சை

கருத்துகள் இல்லை